முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோட்டில் இன்று அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழுவுடன் எடப்பாடி ஆலோசனை

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2023      அரசியல்
Edappadi 2020 11-16

அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழுவுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். 

அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு பட்டியலை எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார். 

இந்த குழுவில் முன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த தேர்தல் பணிக்குழுவுடன் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். 

ஈரோட்டில் நடைபெறும் இந்த ஆலோசனையில் தேர்தல் பணிகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும், அ.தி.மு.க. பொறுப்பாளர்கள் அனைவரும் இன்று நண்பகலுக்குள் ஈரோட்டில் இருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து