முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி.யில் சீன ஊடுருவல் பற்றி விவாதிக்க முடியாது : அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு தகவல்

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2023      இந்தியா
Prakalat-Joshi 2023 01 30

Source: provided

புதுடெல்லி : சீன ஊடுருவல் பற்றி பாராளுமன்ற அவையில் விவாதிக்க முடியாது என அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு அவையை தொய்வின்றி நடத்தும் நோக்கில், அனைத்து கட்சி கூட்டம் நேற்று காலை பாராளுமன்ற இல்ல வளாகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில், அவையின் துணை தலைவரான ராஜ்நாத் சிங், பாராளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி, அவை தலைவர் பியூஷ் கோயல், பாராளுமன்ற விவகார துறை இணை மந்திரி ராம் மேக்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. தலைவர் டி.ஆர். பாலு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களான சுதீப் பந்தோபாத்யாய், சுகேந்து சேகர், டி.ஆர்.எஸ். தலைவர்களான கேசவ ராவ், நாம நாகேஸ்வர ராவ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். எனினும், கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கவில்லை. 

இதுபற்றி அரசு கூறும்போது, பாரத் ஜோடோ யாத்திரையில் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அதனால், அவர்கள் வரஇயலவில்லை என கூறியுள்ளது. கூட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் 27 கட்சிகளை சேர்ந்த 37 தலைவர்கள் கலந்து கொண்டனர். அவை நல்ல முறையில் நடக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டு கொண்டேன். அனைத்து விவகாரங்கள் பற்றியும் விவாதிக்க தயாராக இருக்கிறோம் என கூறினார்.

நேற்றைய கூட்டத்தின்போது, பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த தலைவர்கள், எல்லையில் சீன ஊடுருவல் பற்றி பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என கோரினர். எனினும், பாதுகாப்பு உள்ளிட்ட விசயங்கள் என்பதனால், அதுபற்றி பாராளுமன்ற அவையில் விவாதிக்க முடியாது என மத்திய அரசு பதிலளித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து