முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.79 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு : மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2023      இந்தியா
Budget 2023 02 01

Source: provided

புது டெல்லி, : பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கு ஆண்டு தோறும் ஒதுக்கப்படும் நிதி இந்த அண்டு 66 சதவீதம் அதிகமாக ஒதுக்கி மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

முன்னதாக, பொது பட்ஜெட் நடுத்தர மக்களுக்கு பல சலுகைகளைக் கொண்டதாக இருக்கும் என்று கூறப்பட்டது. இதற்குக் காரணம், தானும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், நடுத்தரக் குடும்பத்தினர் சந்திக்கும் சிக்கல்களை நன்கு அறிவேன் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் குறித்த அறிவிப்பின்போது குறிப்பிட்டிருந்தார்.

இதனைச் சுட்டிக்காட்டியும், வரும் நாள்களில் சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவிருப்பதாலும், நடுத்தர மக்களுக்காக பல நல்ல அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில்தான், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கு 2023 - 24ஆம் நிதியாண்டில் ரூ.79,000 கோடி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மிகப்பெரிய நிதி ஒதுக்கீடாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 2022 - 23ஆம் நிதியாண்டில் அனைவருக்கும் வீடு என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட இத்திட்டத்துக்கு ரூ.48,000 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதுபோல, கடந்த ஆண்டு இந்த திட்டத்தின் கீழ் ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் தகுதிவாய்ந்த 80 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல், நடுத்தர வர்க்கத்தினர் பயனடையும் வகையில் என்று பார்த்தால்.. கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி விவசாய கடன் இலக்கு 20 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்படும். சிறு-குறு-நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.9000 கோடி தொகுப்பு நிதி. இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் புதிய கல்வி கொள்கையில் அம்ரித் பிதி திட்டம். புதிய பழகுநர் திட்டத்தின்கீழ் 47 லட்சம் இளைஞர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு   உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து