எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: கருணாநிதியின் நினைவிடத்தில் வைக்க கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பேனா வழங்கிய சிறுமியிடம் அவரது ஆசையை நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதியளித்தார்.
இந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு நடத்தி வருகிறார். இந்நிலையில், வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வை முடித்து விட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியே வந்தார். அப்போது வேலூர் மாவட்டம் காட்பாடி வஞ்சூர் பகுதியைச் சேர்ந்த யாழினி என்ற 4-ம் வகுப்பு மாணவி, முதல்வரிடம் பேனா ஒன்றை கொடுத்துள்ளார்.
அப்போது அந்த மாணவியை வாகனத்தின் அருகே அழைத்து பேனாவை வாங்கிய முதல்வர், அந்த மாணவியை வாழ்த்தி எதற்காக இந்த பேனா எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவி இந்த பேனாவை கலைஞர் சமாதியில் வைக்க வேண்டும் என தனது ஆசையை கூறினார்.
இதனைக் கேட்ட முதல்வர், சிறுமியின் ஆசையை கண்டிப்பாக நிறைவேற்றுகிறேன் எனக் கூறி அனுப்பி வைத்தார். இது குறித்து சிறுமி கூறுகையில்,
முதல்வரை பார்த்தது எனக்கு மிகவும் மகிச்சியாக இருந்தது. என்னை நன்றாக படிக்கச் சொன்னார். நான் முதல்வரை பார்ப்பேன்னு எதிர்பார்க்கலை எனக் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


