எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி: ஜோ பைடன் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ஜூன் மாதம் அமெரிக்காவுக்கு பயணம் செய்யவுள்ளார்.
ஜோ பைடன் அதிபரான பின் பிரான்ஸ் அதிபர் மெக்ரான் மட்டுமே அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி அரசு முறை பயணமாக வருகிற ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் அமெரிக்காவுக்கு செல்ல உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடிக்கு அமெரிக்காவுக்கு பயணம் வருமாறு அழைப்பு விடுத்தார். ஜோ பைடன் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இந்த பயணத்தின் போது வெள்ளை மாளிகையில் ஜோ பைடன்-மோடி, இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். மேலும் வெள்ளை மாளிகையில் ஜோ பைடன் அளிக்கும் விருந்திலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அமெரிக்க பாராளுமன்ற கூட்டு கூட்டத்திலும் மோடி உரையாற்றுகிறார். இதற்கு முன்பு பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு சென்று உள்ளார். அது உத்தியோகப்பூர்வ பயணமாக இருந்தது.
பிரதமர் மோடி, அமெரிக்காவுக்கு பயணம் செய்யும் தேதி, ஜோ பைடனுடன் சந்திப்புக்கான தேதி உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. முதல்முறையாக அரசு முறை பயணமாக மோடி அமெரிக்காவுக்கு செல்ல உள்ளார். ஜோ பைடன் அதிபரான பின் பிரான்ஸ் அதிபர் மெக்ரான் மட்டுமே அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2009-ம் ஆண்டு ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்த போது வெள்ளை மாளிகையில் முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு விருந்து அளிக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


