எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி ஆணைகள் மற்றும் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 177 இருட்டறை உதவியாளர்கள் மற்றும் 19 ஆய்வக நுட்புநர் நிலை-II பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள், இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு கருணை அடிப்படையில் 21 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் என மொத்தம் 787 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 ஒப்பந்த செவிலியர்கள், 5 இருட்டறை உதவியாளர்கள், 3 ஆய்வக நுட்புநர் நிலை-II மற்றும் 4 இளநிலை உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு கலந்தாய்வு முடிந்து நிரந்தர பணி ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்வர் 5 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்திற்கு 92 இருட்டறை உதவியாளர்கள் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு 85 இருட்டறை உதவியாளர்கள், என 177 இருட்டறை உதவியாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 இருட்டறை உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
உணவு பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர் ஆகிய 6 இடங்களில் உள்ள உணவு பகுப்பாய்வகங்களில் காலியாகவுள்ள 19 ஆய்வக நுட்புநர் நிலை-II பணியிடங்களுக்கு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 3 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குரகம் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 21 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 4 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


