எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
குடைமிளகாய் பருப்பு மஸ்ரூன்
Cooking time in minutes:
20
Ingredients:
குடைமிளகாய் பருப்பு மஸ்ரூன் செய்யத் தேவையான பொருள்கள்;
- பொடியா நறுக்கிய குடைமிளகாய் - 1.
- காளான் - 1/4 கிலோ.
- கடலை பருப்பு - 100 கிராம்.
- கிராம்பு - 2.
- நெய் - 2 டீஸ்பூன்.
- பிரியாணி இலை - 2.
- மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்.
- பொடியா நறுக்கிய பெரிய வெங்காயம் - 2.
- பொடியா நறுக்கிய தக்காளி - 2.
- பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை,மல்லி இலை - சிறிதளவு.
- இஞ்சி,பூண்டு விழுது - 1 ஸ்பூன்.
- மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்.
- மல்லித்தூள் - 2 டீஸ்பூன்.
- கரம்மசாலா - 1 டீஸ்பூன்.
- டோமோட்டோ சாஸ் - 1 டீஸ்பூன்.
- சில்லிசாஸ் -1 டீஸ்பூன்.
- உப்பு - தேவையான அளவு.
Method:
செய்முறை ;
- அடுப்பில் குக்கரை வைத்து 100 கிராம் கடலை பருப்பு, 2 கிராம்பு,1 டீஸ்பூன் நெய்,1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்,2 பிரியாணி இலையை போட்டு 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி பருப்பை 3 விசில் வரும் வரை நன்றாக வேக வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய்யை ஊற்றவும்,
- எண்ணெய் சூடானவுடன் பொடியா நறுக்கிய 2 பெரிய வெங்காயத்த போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
- இதனுடன் பொடியா நறுக்கிய 2 தக்காளி,பொடியா நறுக்கிய 1 குடைமிளகாய்,பொடியாக நறுக்கிய சிறிதளவு கறிவேப்பிலை மல்லி, நறுக்கிய 1/4 கிலோ காளான்,1 ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கவும்.
- இதனுடன் 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 2 டீஸ்பூன் மல்லித்தூள், 1 டீஸ்பூன் கரம்மசாலா,1 டீஸ்பூன் டோமோட்டோ சாஸ், 1 டீஸ்பூன் சில்லிசாஸ் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு 5 நிமிடம் மூடி போட்டு மூடி வேக விடவும்.
- 5 நிமிடம் கழித்து முடியை திறந்து குக்கரில் வேக வைத்த பருப்பை போட்டு உடன் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி கலந்து விடவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சிறிதளவு பொடியாக நறுக்கிய மல்லியை தூவி பரிமாறவும்.
- சுவையான குடைமிளகாய் பருப்பு மஸ்ரூன் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


