எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பெங்களூரு : பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்ட பெங்களூரு - மைசூரு விரைவு சாலையில் மழை நீர் அதிக அளவில் தேங்கியதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
பெங்களூரு - மைசூரு இடையேயான 118 கி.மீ. விரைவு சாலையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். இந்நிலையில் கடந்த வெள்ளியன்று இரவு பெங்களூரு, ராம்நகர், மாண்டியா, மைசூரு ஆகிய இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.
சுமார் 2 மணி நேரம் பெய்த மழையால் பெங்களூரு - மைசூரு விரைவு சாலையில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் இடுப்பளவுக்கு தேங்கிய நீரால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதனால் பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலையில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்து, லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் சுமார் 10 கிமீ தூரத்துக்கு நெரிசலில் நிற்கும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து பெங்களூரு மாநகராட்சி, தேசிய பேரிடர் மீட்பு குழு ஊழியர்கள் இன்ஜின் மூலம் நீரை வெளியேற்றிய பிறகே வெள்ளம் வடிந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


