Idhayam Matrimony

டோனியால் 3 ஆண்டுகளுக்கு விளையாட முடியும்: வாட்சன்

திங்கட்கிழமை, 20 மார்ச் 2023      விளையாட்டு
Watson 2023 03 20

Source: provided

புதுடெல்லி : டோனியால் இன்னும் 3 ஆண்டுகளுக்கு விளையாட முடியும் என்று வாட்சன் தெரிவித்துள்ளார்.

'பிளே ஆப்' சுற்றுக்கு... 

ஐ.பி.எல். போட்டியில் வெற்றிகரமான கேப்டனாக திகழ்பவர் டோனி. அவர் 4 முறை (2010, 2011, 2018, 2021) சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐ.பி.எல். கோப்பையை பெற்றுக் கொடுத்துள்ளார். மேலும் 5 முறை சி.எஸ்.கே. 2-வது இடத்தை பிடித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் அதிக முறை 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இந்த ஆண்டுக்கான 16-வது ஐ.பி.எல். போட்டி வருகிற 31-ந்தேதி தொடங்கு கிறது. அகமதாபாத்தில் நடைபெறும் முதல் ஆட் டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியன் குஜராத் ஜெயண்ட்சை எதிர்கொள்கிறது.

4 ஆண்டுகளுக்கு... 

41 வயதான டோனி இந்த ஐ.பி.எல். போட்டி யோடு ஓய்வு பெறுகிறார். அவர் ஏற்கனவே சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இந்த நிலையில் அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதற்கு போதுமான உடல் தகுதியுடன் டோனி இருக்கிறார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரருமான வாட்சன் தெரிவித்துள்ளார்.

டோனியின் கடைசி... 

இது தொடர்பாக அவர் கூறியதாவது., டோனியின் கடைசி ஐ.பி.எல். போட்டி என்று கேள்விப்பட்டேன். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. டோனியால் இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு தொடர்ந்து விளையாட முடியும். அவர் இன்னும் உடல் தகுதியுடன் இருக்கிறார். பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் மிகவும் நன்றாக இருக்கிறார்.

அவரது தலைமை...

டோனியின் ஆட்டத்தை போலவே அவரது தலைமையும் சிறப்பாக உள்ளது. உடற்தகுதி மற்றும் ஆட்டத்தை நன்றாக உள்வாங்கி கொள்வது அவரை நல்ல கேப்டனாக்கியது. மைதானத்தில் அவரது திறமை அபாரமானது. சி.எஸ்.கே வெற்றி பெற அவர் ஒரு முக்கிய காரணமாகும். இவ்வாறு வாட்சன் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 2 days ago
View all comments

வாசகர் கருத்து