Idhayam Matrimony

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 10 பேர் பலி

வியாழக்கிழமை, 23 மார்ச் 2023      உலகம்
Ukraine 2023 03 23

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 10 பேர் பலியாகினர். 

உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் ஒரு ஆண்டை கடந்து நீடித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் உக்ரைனின் முக்கிய நகரங்களில் ரஷ்ய படைகள் டிரோன் தாக்குதலை நடத்தியது. 

தலைநகர் கீவ்வின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அக்கட்டிடம் இடிந்தது. இதில் 3 பேர் பலியானார்கள். அதே போல் ரிஷிசிவ் நகரில் உள்ள கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியில் நடந்த டிரோன் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயம் அடைந்தனர். 

சபோரிஜுயாவில் குடியிருப்பு பகுதியில் நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். இதற்கிடையே தாக்குதலுக்கு பயன் படுத்தப்பட்ட 21 டிரோன்களில் 16-யை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. 

ரஷ்யா சென்றிருந்த சீன அதிபர் ஜின்பிங் அங்கிருந்து புறப்பட்ட சில மணி நேரங்களில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து