முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய அணுமின் உற்பத்தி நிலைய திறப்பு விழா: துருக்கி செல்லும்: ரஷ்ய அதிபர் புடின்?

வியாழக்கிழமை, 30 மார்ச் 2023      உலகம்
Putin 2023 03 30

நாட்டின் முதல் அணுமின் உலையின் திறப்பு விழாவிற்காக ரஷ்ய அதிபர் புடின் துருக்கிக்கு வரலாம் என்று துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் தெரிவித்தார். 

ரஷ்யாவின் அரசு அணுசக்தி நிறுவனமான ரொசாட்டம், துருக்கியில் புதிய அணுமின் நிலையத்தை கட்டியுள்ளது. துருக்கியின் முதல் அணுமின் உலையின் திறப்பு விழாவிற்காக ரஷ்ய அதிபர் புடின் ஏப்ரல் 27-ம் தேதி துருக்கிக்கு வரலாம் என்று துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் தெரிவித்தார். 

 ஏப்ரல் 27-ம் தேதி புடின் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. அவர் வரமுடியாத சூழலில், காணொலி வாயிலாக விழாவில் இணைவார் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் இதனை ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மறுத்துள்ளது. 

அணுமின் நிலைய கட்டுமானம் உட்பட எரிசக்தி துறையில் கூட்டு மூலோபாய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவது குறித்து புடினும், எர்டோகனும் தொலைபேசி அழைப்பின் போது விவாதித்ததாக கிரெம்ளின் கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து