முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அட்சய பாத்திரம் திட்டத்திற்கான நிதி: கவர்னர் ரவி விளக்கமளிக்க நிதி அமைச்சர் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 30 மார்ச் 2023      தமிழகம்
Budget-9 2023 03 20

அட்சய பாத்திரம் திட்டத்திற்கான நிதி குறித்து கவர்னர் விளக்கமளிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தி உள்ளார். 

டிஸ்கசனரி பண்ட் தொடர்பாக சட்டசபையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:- 

கவர்னர் மாளிகைக்கான ஒதுக்கீட்டில் சில மாற்றங்கள் தொடர்பாக தகவல் வந்ததால் ஆய்வு செய்தோம். சி.ஏ.ஜி. விதிகளை மீறி அட்சயபாத்திரம் திட்டத்திற்கு நிதி கையாளப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகைக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 5 கோடி நிதியில் ரூ. 4 கோடியை அட்சயப் பாத்திர திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 

2019-20ல் இரு தவணையாக அட்சயப் பாத்திரம் திட்டத்திற்கு வழங்கியுள்ளனர். எஞ்சிய ஒரு கோடி ரூபாயை கவர்னர் மாளிகை கணக்கில் எங்கள் கண்ணுக்கே தெரியாத வகையில் வழங்கியுள்ளனர். ஒதுக்கப்பட்ட நிதியை சி.ஏ.ஜி. விதிமுறைகளை மீறி கையாண்டுள்ளனர்.

ரூ. 5 கோடியை மறைமுக கணக்கிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.  அரசின் கஜானாவிலிருந்து நேரடியாக செல்லாமல் தனியாக ஒரு கணக்கில் பணத்தை எடுத்து வைப்பது தவறு. 

தனியார் தொண்டு நிறுவனத்தால் அட்சய பாத்திரம் திட்டம் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டது. அட்சய பாத்திரம் திட்டத்திற்கான நிதி குறித்து கவர்னர் விளக்கமளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து