எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம் ஏப் 27, நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றத்தில் ஆஜராகாத தாசில்தாருக்கும், சப்-இன்ஸ்பெக்டருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்தது ராமநாதபுரம் செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பரமக்குடி அருகேயுள்ள கே.கருங்குளத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவர் பரமக்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டீசல் டேங்க் அமைக்கும் பணியை முடித்துவிட்டு கடந்த 08.04.05 அன்று வீடு திரும்பிக்
கொண்டிருந்த போது சாலையில் சென்று கொண்டிருந்த 2 பேர் மீது கைபட்டுவிட்டதாக கூறி சாதி பெயரை சொல்லி திட்டி அடித்து உதைத்துள்ளனர்.
கருப்பையா கொடுத்த புகாரின் பேரில் பரமக்குடி நகர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து பரமக்குடி சின்னக்கடை தெருவை சேர்ந்த சுரேஷ்(எ) மீனாட்சி சுந்தரம்(41), கமுதக்குடியை சேர்ந்த கரிகாலன்(33) ஆகிய இருவரையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்த வழக்கு ராமநாதபுரம் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கருப்பையாவுக்கு சாதி சான்றிதழ் வழங்கிய வட்டாட்சியர் ஹாஜா முகைதீன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டும் அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதை தொடர்ந்து ராமநாதபுரம் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி பாலசுந்தரகுமார் தாசில்தார் ஹாஜா மூகைதீனுக்கும், சப்-இன்ஸ்பெக்டர் சங்கருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


