Idhayam Matrimony

பால் கொள்முதல் விலையை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 26 மே 2023      தமிழகம்
OPS 2022 12 29

Source: provided

சென்னை : பால் கொள்முதல் விலையை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்து முன்னாள் முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம், 1981-ம் ஆண்டு முதல் ஆவின் என்ற பெயரில் பாலினை கொள்முதல் செய்து விற்பனை செய்து வரும் பணியை மேற்கொண்டு வருகிறது. ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலுக்கு உரிய விலை வழங்கப்படுவதை உறுதி செய்தல் மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பாலினை தங்கு தடையின்றி வழங்குதல் ஆகியவை தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தின் முக்கிய நோக்கங்களாகும். 

ஆனால் அண்மைக் காலமாக ஆவின் பால் மற்றும் உப பொருட்களின் விநியோகத்தில் மிகப் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் நான் என்னுடைய அறிக்கைகள் வாயிலாக பலமுறை சுட்டிக்காட்டியுள்ளேன். ஆனால், தி.மு.க. அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. . 

நுகர்வோர்கள் இதுபோன்ற துன்பங்களை ஒருபுறம் அனுபவித்துக் கொண்டிருக்கையில், பால் உற்பத்தியாளர்கள் தங்களுக்கு உரிய கொள்முதல் விலை கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள். 

இந்தச் சூழ்நிலையில் குஜராத் மாநிலத்தின் அமுல் நிறுவனம் தமிழகத்தில்  தனது வணிகத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது. 

தமிழகத்தில் அமுல் நிறுவனத்தின் வணிகத்தை தடுத்து நிறுத்த வேண்டுமென்று முதல்வர் ஸ்டாலின், மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. 

எனவே ஆவின் பால் மற்றும் ஆவின் பால் பொருட்கள் குறைந்த விலையில் தங்கு தடையின்றி மக்களுக்கு கிடைக்கவும், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து பால் கொள்முதல் விலையை உயர்த்தவும் உடனடி நடவடிக்கை எடுத்து, ஆவின் நிறுவனத்தை அழிவுப் பாதையிலிருந்து ஆக்கப்பூர்வமான பாதைக்கு கொண்டு செல்ல முனைப்புடன் செயல்பட வேண்டுமென்று முதல்வரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து