எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஓவல் : ஐபிஎல் காய்ச்சல் முடிவடையும் தருணம். அடுத்து உண்மையான கிரிக்கெட் போட்டி இந்தியாவுக்கும்-ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியாகும். ஓவல் மைதானத்தில் வரும் ஜூன் மாதம் 7-ம் தேதி நடைபெறுகிறது இந்த இறுதிப் போட்டி.
ஆஸி.க்கு அதிக வாய்ப்பு...
இரு அணிகளுமே முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்ல ஆர்வமாக துடிப்புடன் ஆடுவர். இங்கிலாந்து பிட்ச் என்பதால் ஆஸ்திரேலியாவுக்கு அதிக வெற்றி வாய்ப்பு என்று ரிக்கி பாண்டிங்கும் பிற பண்டிதர்களும் கூறுகின்றனர். ஆனால் இந்தியாவுக்கும் வாய்ப்பு என்று சொல்ல முடியாததற்குக் காரணம், ரிஷப் பண்ட், ஜஸ்பிரித் பும்ரா, ஷ்ரேயஸ் அய்யர், கே.எல்.ராகுல். காயம் காரணமாக இந்த டெஸ்ட் போட்டி இறுதியில் ஆட மாட்டார்கள், இது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு தான்.
10 போட்டிகளில்...
ஆனாலும் முகமது ஷமி, சிராஜ் உள்ளனர். அஸ்வின் இருக்கிறார். ஜடேஜா எப்படியும் ஆடுவார். ஆஸ்திரேலியா கடந்த 18 மாதங்களாக டெஸ்ட் அரங்கில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. பாட் கமின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலியாவில் 10 போட்டிகளில் தோற்கவே இல்லை. வெற்றிகள் தான். பாகிஸ்தானிற்குச் சென்று அங்கு மட்டைப்பிட்சில் தொடரை வென்று வரலாறு படைத்தனர் ஆஸ்திரேலியர்கள்.
அச்சம் இருக்கவே...
மேலும் இலங்கை தொடரில் கால்லேயில் வென்றனர், இந்தியாவுக்கு வந்து ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் இந்தூரில் வென்றனர், ஆனால் தொடரை இழந்தனர். அனைத்தும் குழிப்பிட்ச். இந்தியாவில் நடந்த சமீபத்திய தொடரில் இந்தியா வென்றதால் ஒரு பக்கம் ஆஸ்திரேலியாவுக்கு இந்திய ஸ்பின்னர்கள் குறித்த அச்சம் இருக்கவே செய்யும். ரிஷப் பண்ட் இல்லாதது பெரிய நிம்மதியை அவர்களுக்கு அளித்திருக்கும். பாட் கமின்ஸ், ஸ்காட் போலண்ட், ஹேசில்வுட், ஸ்டார்க் பவுலிங் சேர்க்கை, நேதன் லயனுடன் நம்மை படுத்தி எடுத்து விடும் என்று நம்பலாம்.
போட்டி விவரம்...
போட்டி நடைபெறும் இடம், தேதி: ஜூன் 7-11 புதன்கிழமை - லண்டன் ஓவல் மைதானம். டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்குத் தொடங்கும். லஞ்ச் 5.30-6.15, தேநீர் இடைவேளை 8.15. இறுதி செஷன் 8:30-10:30 ரிசர்வ் நாள்: இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் நாள் உண்டு. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் அந்த நாளை ஈடுகட்ட கூடுதல் நாள் உண்டு. போட்டி ட்ரா. ஆனால், இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்தளிக்கப்படும். குக்காபரா பந்துதான் என்று சில ஊடகங்கள் சொல்லி வந்தாலும் இங்கிலாந்தில் டெஸ்ட்களில் பயன்படுத்தப்படும் டியூக்ஸ் பந்துகளில்தான் டெஸ்ட் போட்டி நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி:
பாட் கம்மின்ஸ் (கே ), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், மிட்செல் மார்ஷ், டாட் மர்பி, மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித் , மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்.
இந்திய அணி :
ரோஹித் சர்மா (கே), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கேஎஸ் பாரத் (வி.கீ.), ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், இஷான் கிஷன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
லிபியாவில் இந்திய தம்பதி கடத்தல்
14 Dec 2025டிரிபோலி, லிபியாவில் 3 வயது குழந்தையுடன் இந்திய தம்பதி கடத்தப்பட்டனர். போர்சுகலுக்கு செல்ல அவர்கள் முயற்சித்தபோது கடத்தப்பட்டுள்ளனர்.
-
இந்திய ரூபாய் நோட்டுகளை அனுமதிக்க நேபாளம் முடிவு
14 Dec 2025காத்மாண்டு, இந்திய ரூபாய் நோட்டுகளை மீண்டும் அனுமதிக்க நேபாளம் முடிவு செய்துள்ளது.
-
நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்
14 Dec 2025காத்மண்டு, நேபாளத்தில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.;
-
கவர்னரின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதது ஏன்? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
14 Dec 2025கும்பகோணம், கவர்னர் கலந்துகொள்ளும் பட்டமளிப்பு விழாக்களில் நாங்கள் கலந்து கொள்ளாதது ஏன் என்பது குறித்து தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் விளக்கமளித்துள்ளார்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 14-12-2025
14 Dec 2025 -
ராகுலுடன் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று ஆலோசனை
14 Dec 2025சென்னை, தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை உறுதி செய்ய, தமிழகம் - புதுச்சேரி காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி டெல்லியில
-
அமித்ஷா இன்று தமிழகம் வருகை
14 Dec 2025வேலூர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகிறார். வேலூரில் கட்சி நிர்வாகிகளுடன் அவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
-
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் முக்கிய தளபதி பலி
14 Dec 2025காசா சிட்டி, காசா முனையில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. காசா சிட்டியில் சென்ற காரை குறிவைத்து டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
-
ஈரோட்டில் விஜய் மக்கள் பிரச்சார கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி
14 Dec 2025சென்னை, ஈரோட்டில் பெருந்துறை அருகே விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்: பெண்ணை அடித்துக்கொன்ற புலி
14 Dec 2025மும்பை, மகாராஷ்டிராவில் பெண்ணை புலி அடித்துக்கொன்ற சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பா.ஜ.க.-அ.தி.மு.க.வின் ஊதுகுழலாக உள்ளாா்: அன்புமணி மீது அமைச்சா் விமர்சனம்
14 Dec 2025சிதம்பரம், பா.ம.க. தலைவா் அன்புமணி தற்போது அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் ஊதுகுழலாக உள்ளாா் என அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
-
ஜோர்டான், ஓமன் உள்பட 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்
14 Dec 2025புதுடெல்லி, அரசு முறைப் பயணமாக ஜோர்டான், ஓமன் மற்றும் எத்தியோப்பியா நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார்.
-
திருவனந்தபுரம் மாநகராட்சியின் புதிய மேயருக்கான பரிந்துரை பட்டியலில் ராஜேஷ், ஸ்ரீலேகா
14 Dec 2025திருவனந்தபுரம், கேரள மாநில உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி.
-
நமக்கு ஓட்டுப்போடாதவர்கள் கூட தி.மு.க.வுக்கு வாக்களிக்கின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
14 Dec 2025திருவண்ணாமலை, நமக்கு ஓட்டுப்போடாதவர்கள் கூட தி.மு.க.வுக்கு வாக்களிக்கின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்ற இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத
-
விழாக்கோலம் பூண்ட திருவண்ணாமலை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் எழுச்சிமிகு வரவேற்பு
14 Dec 2025திருவண்ணாமலை, திருவண்ணாமலைக்கு நேற்று வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
மெஸ்ஸி-ராகுல் காந்தி சந்திப்பு
14 Dec 2025ஐதராபாத், ஐதராபாத்தில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை சந்தித்தார்.
-
த.வெ.க. வேட்பாளர்கள் அறிவிப்பு குறித்து புஸ்ஸி ஆனந்த் விளக்கம்
14 Dec 2025திருச்செங்கோடு, த.வெ.க.வின் வேட்பாளர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மட்டும் தான் அறிவிப்பார்” என அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.
-
பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு சிறப்பு தபால் தலை துணை ஜனாதிபதி வெளியிட்டார்
14 Dec 2025புதுடெல்லி, தமிழக மன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு சிறப்பு தபால் தலையை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டார்.
-
ஆஸ்திரேலியாவில் பயங்கரம்: இரண்டு மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி
14 Dec 2025சிட்னி, ஆஸ்திரேலியாவில் 2 மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
-
நாட்டிலேயே 5 லட்சம் நிர்வாகிகளை கொண்ட ஒரே இளைஞர் அணி தி.மு.க. இளைஞர் அணி மட்டும்தான் துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
14 Dec 2025சென்னை, நாட்டிலேயே 5 லட்சம் நிர்வாகிகளை கொண்ட ஒரே இளைஞர் அணி தி.மு.க.இளைஞர் அணி மட்டும்தான் என்று துணை முதல்வர் உதயநிதி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
தென் ஆப்பிரிக்காவில் கோவில் இடிந்து இந்தியர் உள்பட 4 பேர் பலி
14 Dec 2025கேப்டவுன், தென் ஆப்பிரிக்காவில் கோவில் இடிந்து விழுந்த விபத்தில் இந்தியர் உள்பட 4 பேர் பலியாயினர்.
-
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு - 9 பேர் காயம்
14 Dec 2025ரோட் ஐஸ்லாந்து, அமெரிக்காவின் ரோட் ஐஸ்லாந்து மாகாணத்தில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தின் சனிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 9 பேர்
-
கடலோர தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
14 Dec 2025சென்னை, கடலோர தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சிரியாவில் ராணுவ வீரர்கள் உட்பட அமெரிக்கர்கள் 3 பேர் படுகொலை: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சூளுரை
14 Dec 2025வாஷிங்டன், சிரியாவில் ராணுவ வீரர்கள் உட்பட 3 அமெரிக்கர்கள் படுகொலை சம்பவத்திற்கு நிச்சயம் பதிலடி தரப்படும் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்
14 Dec 2025சென்னை, பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


