முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்திரிகையாளர்களுக்கு மனை பட்டா ரத்து: முதல்வர் ஸ்டாலினுக்கு முன்னாள் எம்.பி. முத்துமணி கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 30 மே 2023      தமிழகம்
Muthumani-MP 2023-05-30

Source: provided

சென்னை : மதுரையில் பத்திரிகையாளர்களுக்கான வீட்டு மனைப்பட்டா ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. முத்துமணி கோரிக்கை விடுத்துள்ளார். 

தமிழக  அரசிடம் இருந்து கடந்த 2019-ம் ஆண்டு முன்னுரிமை அடிப்படையில் அரசு நிர்ணயித்திருந்த அன்றைய நிலமதிப்பீட்டின்படி தலா ரூ. 5.25 லட்சம் வீதம் பணம் செலுத்த அரசு வீட்டுமனை பெற்ற 38 பேரின் பட்டாக்களை மதுரை மாவட்ட முன்னாள் கலெக்டர் அனீஷ்சேகர், தான் பணி மாறுதல் செய்யப்படுவதற்கு முதல் நாள் ரத்து செய்துள்ளது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். பத்திரிகைாயளர்கள் சுத்தக்கிரையம் பெற்ற சுமார் 4 ஆண்டுகளுக்கு பின்பு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரை சூர்யா நகரில் பத்திரிகையாளர்கள் மேற்படி கிரையத் தொகை அடிப்படையில் வழங்கலாம் என பிறப்பிக்கப்பட்டு அதில் சில பத்திரிகையாளர்கள் மறைவு எய்தியபின் 79 பேர் தகுதி பெற்றிருந்த நிலையில் அதில் 48 பேர் மனையிடம் கிரையம் பெற்றிருந்தனர். அநத் 48 பேரில் 38 பேருக்கான மனையிட பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

பொதுவாக இலவச மனைப்பட்டா பெறுவோர்களுக்கு அவர்கள் பெயரிலோ, அல்லது அவர்களது வீட்டார்களின் பெயரிலோ 59 கி.மீ. சரகத்திற்கு வேறு மனையோ, மனையிடமோ இருக்க கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டு இருப்பதாக அறிகிறேன். அந்த நிபந்தனை சுத்தக்கிரைய பணம் செலுத்தி தலா 3 செண்டு மனையிடம் வாங்கி மேற்படி பத்திரிகையாளர்களுக்கு எந்த வகையிலும் பொருந்தாது என்பதை முன்னாள் மதுரை மாவட்ட கலெக்டர் கவனத்தில் கொள்ளவில்லை. 

இந்த விபரம் முன்னாள் மதுரை  கலெக்டரின் கவனத்திற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கொண்டு செல்லாததால் தான் இநத் தேவையற்ற சட்டவிதிகளுக்கு புறம்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. 

எனவே மதுரை ஐகோர்ட்டின் கருத்துக்கு மாறாக சட்டப்படியாக உரிய பரிசீலனையின்றி மதுரை சூர்யா நகரில் தலா ரூ. 5.25 லட்சம் செலுத்தி அரசு வீட்டுமனைகளை கிரையம் பெற்ற 38 பத்திரிகையாளர்களின் பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டதை ரத்து செய்திட முதல்வர் உரிய நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து