முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவாவின் முதல் வந்தே பாரத் ரயில்: பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்

வெள்ளிக்கிழமை, 2 ஜூன் 2023      இந்தியா
Vande-Bharat-train 2023 03

பானாஜி, கோவாவின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை இன்று காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். 

இந்தியாவின் 19வது வந்தே பாரத் விரைவு ரயிலை இந்திய ரயில்வே இன்று தொடங்க உள்ளது. இந்த அதிவேக ரயிலானது கோவா மற்றும் மகாராஷ்டிரத்தை இணைக்கும் வகையில் இயக்கப்படுகிறது.  மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் நிலையத்தில் புறப்பட்டு கோவாவின் மட்கான் நிலையங்களுக்கு இடையே இந்த ரயில் இயங்கும். கடந்த வாரம் இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது. 

புதிய வந்தே பாரத் ரயில் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் இயக்கப்படுகிறது. இது குறைந்தது சுமார் ஏழு மணி நேரத்தில் இந்த தூரத்தைக் கடக்க எடுத்துக் கொள்கின்றது. காலை 10.30 மணிக்கு மட்கான் ரயில் நிலையத்திலிருந்து பயணத்தைத் தொடங்கி மாலை 5.30 மணிக்கு மும்பையை அடைகிறது.  வந்தே பாரத் ரயிலின் மூலம் கோவாவுக்கு செல்லும் பயண நேரம் குறையும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து