எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : ரயில் விபத்துகளை தடுக்க உதவக் கூடிய ‘கவாச்’ தொழில்நுட்பம் இருந்திருந்தால் ஒடிஷாவில் நிகழ்ந்த ரயில் விபத்தை தவிர்த்திருக்கலாம் என்று பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஒடிசா ரயில்கள் விபத்தில் 250-க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோயுள்ளன. 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளில் நடந்த 3 மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக ஒடிசா ரயில் விபத்து இணைந்துள்ளது. இந்த ரயில் விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளாமல் தடுக்கும் ‘கவாச்’ (Kavach) என்ற தொழில்நுட்பம் விபத்து நடந்த பகுதியில் இல்லை என்ற தகவலை ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார். இதுதான் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.
கவாச் தொழில்நுட்பம் என்றால் என்ன?
கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி ரயில்வே அமைச்சகம் ரயில்கள் பாதுகாப்புக்காக முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பான 'கவாச்'-ஐ அறிவித்தது. இதற்காக மத்திய அரசின் ரிசேர்ச் டிசைன்ஸ் அண்ட் ஸ்டாண்டர்ட்ஸ் ஆர்கனைசேஷனிற்கு மூன்று இந்திய நிறுவனங்கள் இதனை உருவாக்கிக் கொடுக்க, இந்திய ரயில்வே அதனை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது. கவாச் என்ற சொல் கவசம் - பாதுகாப்பு என்பதைக் குறிப்பதாகும்.
கவாச் எப்படி செயல்படும்?
கவாச் தொழில்நுட்பமானது லோக்கோ பைலட்டுகள் என்றழைக்கப்படும் ரயில் ஓட்டுநர்களுக்கு விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும். எஸ்பிஏடி, சிக்னல் பாஸிங் அட் டேஞ்சர் எனப்படும் இந்த சமிக்ஞையானது ஒரே மார்க்கத்தில் இரு ரயில்கள் வந்தால் எச்சரிக்கும். மிகுந்த அடர்த்தியான பனி மூட்டம் இருக்கும்போது எதிரே ரயில் வந்தால் அலர்ட் செய்யும். எச்சரிக்கை செய்வதோடு மட்டுமல்லாமல், இது தானாகவே பிரேக் அப்ளை செய்து ரயிலின் வேகத்தை மட்டுப்படுத்தி விபத்துக்கான சாத்தியத்தை குறைக்கும்.
ஒடிசா ரயில் விபத்தை தவிர்த்திருக்கலாமா?
இந்நிலையில் கவாச் தொழில்நுட்பம் இல்லாததால் தான் ஒடிசா ரயில் விபத்து நடந்ததாக எதிர்க்கட்சிகள் பலவும் குற்றஞ்சாட்டி வருகின்றன. விபத்துக்குள்ளான மூன்று ரயில்களில் எதிலும் கவாச் தொழில்நுட்பம் இல்லை என்று சொல்லப்படுவதால் அது பற்றிய விவாதங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், கவாச் இருந்திருந்தால் இத்தகைய மிகப் பெரிய விபத்தை தவிர்த்திருக்கலாமா என்பது ஊகங்களின் வசமே விடக்கூடியதாக உள்ளது என்று தொழில்நுட்ப வல்லுநர்களே கூறுகின்றனர். காரணம், ஒடிசா விபத்து இந்திய ரயில் விபத்து வரலாற்றிலேயே மிகவும் சிக்கலானது.
ஒரு ரயில் தவறான பாதையில் மாறிச் சென்று நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதுகிறது. அந்த சரக்கு ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு வேறொரு தண்டவாளத்தில் வந்த மற்றொரு எக்ஸ்பிரஸ் ரயிலின் மீது மோதுகிறது. அந்த ரயிலின் பெட்டிகளும் தடம் புரள்கின்றன. இப்படி மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், கவாச் இதில் எந்த அளவுக்கு உதவியிருக்கும் என்பது இதுபோன்ற விபத்துகளை அது தடுத்திருந்த முந்தைய சான்றுகள் இருந்தால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இருந்தாலும், இதுபோன்ற தொழில்நுட்பங்களை சுணக்கமின்றி செயல்படுத்த பரிந்துரைக்கின்றனர். எதிர்காலத்தில் பாதுகாப்பை உறுதி செய்யவும், விபத்துப் பேரிடரில் பாடம் கற்கவும் உதவும் என்பதால்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


