முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலிஸ்தான் பயங்கரவாதி கொலை விவகாரம்: இந்திய உயர் தூதர் அதிகாரியை வெளியேற்றியது கனடா அரசு

செவ்வாய்க்கிழமை, 19 செப்டம்பர் 2023      உலகம்
Canada 2023-09-19

ஒட்டாவா, காலிஸ்தான் பயங்கரவாதி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியாவின் உயர் தூதர் அதிகாரியை கனடா அரசு வெளியேற்றி உள்ளது. 

இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என காலிஸ்தான் பயங்கரவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இவர்கள் கனடா நாட்டில் அதிக அளவில் உள்ளனர். காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனடா அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

தாங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக கனடா தெரிவிக்கப்பட்ட போதிலும், அங்கு காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் அதிகரித்த வண்ணம்தான் உள்ளது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது என கனடா குற்றம்சாட்டியுள்ளது. 

இந்த நிலையில், இந்தியாவின் உயர் தூதர் அதிகாரி ஒருவரை கனடா வெளியேற்றியுள்ளது. ஏற்கனவே இந்தியா - கனடா இடையிலான ராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.  இது குறித்து கனடா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெலானி ஜூலி கூறுகையில்,  தற்போது நாங்கள் இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரிகையை நாட்டில் இருந்து வெளியேற்றியுள்ளோம். அவர் இந்தியாவின் வெளிநாடு புலனாய்வு அமைப்பின், ஆராய்ச்சி மற்றும் ஆய்வு பிரிவின் (RAW) தலைவராக செயல்பட்டவர் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து