எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருப்பதி:ரூ. 2.80 லட்சத்தில் பச்சோந்தி போல நிறம் மாறும் சேலை ஒன்றை தயாரித்துள்ளார் ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் நல்ல விஜய். இவர் விதவிதமான சேலைகளை தயாரித்து வருகிறார். கடந்த காலங்களில் இவர் மணம் வீசக் கூடிய சேலைகளை தயாரித்தார். இதற்காக மூலிகைகளை பயன்படுத்தினார். மேலும் ஊசி முனையில் நுழையக்கூடிய புடவை ஒன்றையும் உருவாக்கி சாதனை படைத்தார்.
இந்த நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் இவரிடம் பச்சோந்தி போல நிறம் மாறக்கூடிய சேலை செய்ய அணுகினார். இதனை தொடர்ந்து விஜய் ரூ. 2.80 லட்சம் செலவில் நிறம் மாறக்கூடிய சேலை ஒன்றை தயாரித்தார்.
இந்த சேலையை தயாரிக்க 30 கிராம் தங்கம் மற்றும் 500 கிராம் வெள்ளியை உருக்கி கலவையாக சேர்த்துள்ளார். பகல், இரவு மற்றும் மின் வெளிச்சத்திற்கு ஏற்றபடி இந்த புடவை 3 விதமான நிறங்களில் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
பச்சோந்தி போல நிறம் மாறக்கூடிய சேலை வெகுவாக கவர்ந்துள்ளது. அவரிடம் தொழிலதிபர் ரூ. 2.80 லட்சம் கொடுத்து சேலையை பெற்றுக் கொண்டார். விஜய் தற்போது ரூ. 25 லட்சம் மதிப்பில் ஒரு சேலையை நெசவு செய்து வருவதாக தெரிவித்துள்ளார். ரூ. 2.80 லட்சத்தில் பச்சோந்தி (படம் உண்டு)
போல நிறம் மாறும் சேலை
ஐதராபாத்தை சேர்ந்தவர் தயாரிப்பு
திருப்பதி, செப். 29-
ரூ. 2.80 லட்சத்தில் பச்சோந்தி போல நிறம் மாறும் சேலை ஒன்றை தயாரித்துள்ளார் ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் நல்ல விஜய். இவர் விதவிதமான சேலைகளை தயாரித்து வருகிறார். கடந்த காலங்களில் இவர் மணம் வீசக் கூடிய சேலைகளை தயாரித்தார். இதற்காக மூலிகைகளை பயன்படுத்தினார். மேலும் ஊசி முனையில் நுழையக்கூடிய புடவை ஒன்றையும் உருவாக்கி சாதனை படைத்தார்.
இந்த நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் இவரிடம் பச்சோந்தி போல நிறம் மாறக்கூடிய சேலை செய்ய அணுகினார். இதனை தொடர்ந்து விஜய் ரூ. 2.80 லட்சம் செலவில் நிறம் மாறக்கூடிய சேலை ஒன்றை தயாரித்தார்.
இந்த சேலையை தயாரிக்க 30 கிராம் தங்கம் மற்றும் 500 கிராம் வெள்ளியை உருக்கி கலவையாக சேர்த்துள்ளார். பகல், இரவு மற்றும் மின் வெளிச்சத்திற்கு ஏற்றபடி இந்த புடவை 3 விதமான நிறங்களில் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
பச்சோந்தி போல நிறம் மாறக்கூடிய சேலை வெகுவாக கவர்ந்துள்ளது. அவரிடம் தொழிலதிபர் ரூ. 2.80 லட்சம் கொடுத்து சேலையை பெற்றுக் கொண்டார். விஜய் தற்போது ரூ. 25 லட்சம் மதிப்பில் ஒரு சேலையை நெசவு செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026