எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டேராடூன், உத்தராகண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களின் முதல் காட்சி வெளியாகியுள்ளது. எண்டோஸ்கோபி கேமரா மூலம் தொழிலாளர்களுடன் மீட்புக் குழு தொடர்பு ஏற்படுத்தியுள்ளது.
உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு கடந்த 12-ம் தேதி அதிகாலை மண் சரிவு ஏற்பட்டு 41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதையின் நடுவில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்க 8 அரசு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் இரவு பகலாக முயற்சி செய்து வருகின்றனர்.
10-வது நாளாக நேற்று மீட்புப் பணி தொடர்ந்த நிலையில் பைப் மூலம் எண்டோஸ்கோபி கேமராவை செலுத்தி அங்குள்ள தொழிலாளர்களுடன் மீட்புக் குழுவினர் தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர். தொழிலாளர்களின் முதல் காட்சி வெளியாகி மீட்புக் குழுவினருக்கு உத்வேகத்தையும், தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நம்பிக்கையையும் கொடுத்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு இந்தத் தொடர்பை மீட்புக் குழு ஏற்படுத்தியுள்ளது. மேலும் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை ஒவ்வொருவராக கேமரா முன் வரச் சொல்லி அடையாளம் கண்டு மீட்புக் குழு பேசியுள்ளது.
அதுமட்டுமல்லாது, பைப் மூலம் முதன்முறையாக சூடான உணவும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கண்ணாடிக் குடுவைகளில் சுடச்சுட கிச்சடி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அவர்களுக்கு உலர் கொட்டைகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கிச்சடி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தொழிலாளர்களுக்கு விரைவில் மொபைல் போன்களும் சார்ஜர்களும் வழங்கப்படும் என்று மீட்புப் பணிகள் பொறுப்பு அதிகாரி கர்னல் தீபக் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட் சுரங்கப் பாதையின் மேற்பகுதியில் செங்குத்தாக துளையிட திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக குஜராத், ஒடிசாவில் இருந்து புதிதாக ராட்சத துளையிடும் இயந்திரங்கள் கொண்டு வரப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


