Idhayam Matrimony

பார்லி., தேர்தலில் ராகுல் காந்தி வயநாட்டில் மீண்டும் போட்டி

புதன்கிழமை, 29 நவம்பர் 2023      இந்தியா
Rahul-Gandhi-1 2023 04 03

Source: provided

புதுடெல்லி : மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வயநாட்டில் போட்டியிடுவார் என அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தாரிக் அன்வர் தெரிவித்தார். 

முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் தாரிக் அன்வர் பேசும்போது,  ராகுல் காந்தி வயநாட்டில் நிச்சயம் போட்டியிடுவார். வயநாடு மக்கள் மீது அவருக்கு அவ்வளவு பாசம் என்றார்.  காந்தி வட இந்தியாவில் இருந்து இரண்டாவது தொகுதியில் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு, நான் அப்படி நினைக்கவில்லை, ஆனால் கட்சியின் மூத்த தலைவராக இருப்பதால் அவர் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார். 

ஏற்கனவே இரண்டு முறை மக்களவையில் ஆலப்புழாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய அகில இந்தியக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால் மீண்டும் போட்டியிடலாம் என்ற தகவல் குறித்த மற்றொரு கேள்விக்கு, அவருக்கு அதிக ஆர்வம் இல்லை. 2019இல் கூட அவர் போட்டியிடவில்லை, அவர் கட்சிக்காக வேலை செய்வதால், இந்த முறை வித்தியாசமாக இருக்காது என்று அன்வர் கூறினார். கண்ணூர் தொகுதி எம்.பி.யும், மாநில கட்சித் தலைவருமான கே.சுதாகரன் மீண்டும் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு, அதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று அன்ர் பதிலளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து