Idhayam Matrimony

சென்னையில் ரூ.10-க்கு ஆவின் பால் பாக்கெட் விநியோகம்

வெள்ளிக்கிழமை, 1 டிசம்பர் 2023      தமிழகம்
Aavin-2023-11-02

Source: provided

சென்னை : சென்னையில் ரூ.10-க்கு ஆவின் பால் பாக்கெட் நேற்று முதல் விநியோகப்பட்டது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளொன்றுக்கு சுமார் 14.50 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் நாளொன்றுக்கு சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள பால் உபபொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் பால் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (மெஜெந்தா நிறம்), சமன்படுத்தப்பட்ட பால் (நீல நிறம்), நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை நிறம்) மற்றும் நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு நிறம்) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையிலும் அனைத்து வயதினரும் பருகும் வகையிலும் கடந்த மே 9-ம் தேதி சென்னையில் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட 500 மி.லி. ஆவின் டிலைட் பால் (ஊதா நிற பால் பாக்கெட்) அறிமுகம் செய்யப்பட்டு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இதனைத்தொடர்ந்து தற்போது ஆவின் 500 மி.லி. டிலைட் பால் ரூ.21 விலையில் மாதாந்திர பால் அட்டைகள் வருகிற டிசம்பர் மாதம் முதல் அனைத்து வட்டார அலுவலகங்கள், ஆவின் பாலகங்கள் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களில் விற்பனை செய்யப்படும். மேலும் பொது மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப ரூ.10-க்கு 200 மி.லி. ஆவின் டிலைட் பால், 1-ம் தேதி (நேற்று) முதல் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து