முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 உலகக்கோப்பை தொடர்: இந்திய கேப்டன் ரோகித் சர்மா..?

வெள்ளிக்கிழமை, 1 டிசம்பர் 2023      விளையாட்டு
Rohit-Sharma 2023 08-07

Source: provided

மும்பை : டி-20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மா தேர்வாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் டி-20 தொடரில் விராட் கோலி இடம்பெற மாட்டார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

சுற்றுப் பயணம்... 

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டு உள்ளார். ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்கு கே.எல். ராகுல் கேப்டனாகவும், டி-20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கேப்டனாக நியமனம்...

டி-20 தொடருக்கான இந்திய அணியில் ரோகித், விராட் கோலி இடம் பெறவில்லை. இனி இவர்கள் டி-20 போட்டிகளில் விளையாடமாட்டார்கள் என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட உள்ளதாக பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

விராட் கோலி இல்லை...

மேலும் இளம் வீரர்கள் அதிகமாக உள்ளதால் விராட் கோலி இந்த தொடரில் விளையாடுவது சந்தேகம்தான் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. அப்படி ரோகித் கேப்டனாக செயல்பட்டால், கில் அல்லது ஜெய்ஸ்வால் ஆகியோரில் ஒருவருடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து