எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : 4 மாநில சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டதில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கிறது. தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் 9-ம் தேதி அறிவித்தது. 5 மாநிலங்களிலும் நவம்பர் 7 முதல் 30-ம் தேதி வரை வாக்குப் பதிவு நடைபெறும் என்றும் டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவித்தது.
அதன்படி, சத்தீஸ்கரில் நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளிலும், மிசோரமில் நவம்பர் 7, மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17, ராஜஸ்தானில் நவம்பர் 25, தெலுங்கானாவில் நவம்பர் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 தொகுதிகளுக்கும் கடந்த 30-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதில், 71.07 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இவற்றில், கங்காநகர் மாவட்டத்தின் காரன்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் இறந்ததால், அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. எஞ்சிய 199 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த மாதம் 25-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ராஜஸ்தானில் பா.ஜ.க. - காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவியது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 7-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. நவம்பர் 17-ம் தேதி இரண்டாவது கட்டமாக மீதமுள்ள தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இரு கட்ட தேர்தல்களையும் சேர்த்து சத்தீஸ்கர் தேர்தலில் 76.31 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்த மாநிலத்தில் பா.ஜ.க. - காங்கிஸ் இடையே நேரடி போட்டி நிலவியது.
ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் மிசோரம் தவிர்த்த நான்கு மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்நிலையில் மாலை 6 மணி நிலவரப்படி, 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் பா.ஜ.க. 15 இடங்களில் வெற்றியடைந்து, மேலும் 40 தொகுதிகளில் முன்னிலை பெற்று இருந்தது. காங்கிரஸ் 8 தொகுதிகளில் வெற்றி பெற்று, 27 இடங்களில் முன்னிலையில் இருந்தது.
230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. 77 தொகுதிகளில் வெற்றியும், 87 இடங்களில் முன்னிலையும் பெற்று இருந்தது. காங்கிரஸ் 18 இடங்களில் வெற்றியும், 47 இடங்களில் முன்னிலையும் பெற்று இருந்தது.
199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற ராஜஸ்தானில் பா.ஜ.க. 99 இடங்களில் வெற்றியடைந்து, 16 இடங்களில் முன்னிலை வகித்து வந்தது. 56 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி 12 இடங்களில் முன்னிலையில் இருந்தது.
119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானாவில் காங்கிரஸ் 41 இடங்களில் வெற்றி பெற்று, 23 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. 4 தொகுதிகளில் வெற்றியடைந்த பா.ஜ.க. 4 இடங்களில் முன்னிலையில் இருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ


