எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : மழை பாதித்த இடங்களில் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பதுக்கினாலோ அல்லது கூடுதல் விலைக்கு விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையின் மழை பாதிப்பு நிலவரம் குறித்து தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மழைநீர் வடியத் தொடங்கிவிட்டது. மோட்டார்கள் மூலம் மழைநீர் வெளியேற்றும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். 1,800 பம்பு செட்டுகள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மின்சார வாரியம், காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை போன்ற அனைத்து துறை சார்ந்தவர்களும் மீட்பு, நிவாரணப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படை சார்பில் 34 குழுக்கள் பணியில் உள்ளன. 311 கால்நடை உயிரிழப்பு பதிவாகியுள்ளது. சென்னை பெரும்பாக்கம், எண்ணூர் உள்ளிட்ட 4 மின் நிலையங்களுக்கு மட்டும் தற்போது வரை மின் இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளது. மின் நிலையங்களில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் குறைய குறைய மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் 4 சதவீத பகுதிகளில் மின்விநியோகம் வழங்கப்படவில்லை; விரைவில் நிலைமை முழுவதுமாக சரிசெய்யப்படும். உயிரிழப்புகளை தடுக்கவே மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
மெட்ரோ ரெயில்கள் முழுமையாக இயக்கப்படுகின்றன. சென்னையில் 85 சதவீத இடங்களில் செல்போன் சேவை சீரானது. இன்று மாலைக்குள் செல்போன் சேவை முழுமையாக சீராகும். குடிநீர் கேன்கள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பதுக்கக்கூடாது. அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் பீதியடைந்து அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைக்க வேண்டாம்; தட்டுப்பாடு வராது. மழை காரணமாக 5 லட்சம் லிட்டர் பால் வழங்கப்படாமல் உள்ளது. வடசென்னையில் விரைவில் மின்விநியோகம் வழங்கப்படும்.
சென்னை புறநகரில் தேங்கிய தண்ணீரை மதகுகள் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செம்மஞ்சேரி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் படிப்படியாக குறைந்து வருகிறது. மிக்ஜம்' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் படகுகள் மூலம் உணவு வழங்கப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு விநியோகம் செய்யப்படுகிறது. சென்னை விரைவில் பழைய நிலைக்கு திரும்பும்.
மழை நீர் தேங்கிய 866 இடங்களில் 19 ஆயிரம் பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். அடையாற்றில் வெள்ளம் குறைந்தது. வினாடிக்கு 37 ஆயிரம் கன அடி நீர் செல்கிறது. புயல் மற்றும் மீட்பு பணிகளில் 75 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வடிந்துவிட்டது. வடியாத இடங்களில் மோட்டார் மூலம் வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு கூறினார்.
தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி கூறுகையில், ''தண்ணீர் வடிந்த பகுதிகளில் மின்சார விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. மழைநீர் தேங்கிய பகுதிகளில் மக்கள் பாதுகாப்பு கருதி மின்சார விநியோகம் துவங்கவில்லை. பெரும்பாக்கம், எண்ணூர் உள்ளிட்ட 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. பெரிய அளவில் பாதிப்பு இல்லாத பகுதிகளில் விரைவில் மின்சார இணைப்பு வழங்கப்படும்'' எனக் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: புள்ளி பட்டியல் 'ஏ' பிரிவில் முதலிடத்தில் இந்திய அணி
15 Sep 2025துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தற்போது வரை 6 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலைியல் புள்ளி பட்டியலில் ஏ பிரிவில் இந்திய அணியும் பி பிரிவில் ஆப்கானிஸ்தானும்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-09-2025.
15 Sep 2025 -
வக்பு திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: சில விதிகளுக்கு இடைக்காலத் தடை
15 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், வக்ஃப் சட்டத் திருத்த சட்
-
நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் அமைச்சரவையில் 3 பேர் பதவியேற்பு
15 Sep 2025காத்மாண்டு : நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் 3 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர்.
-
மருத்துவ படிப்பை பாதியில் உதறிய மதராசி பட நடிகர்
15 Sep 2025சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மதராசி படத்தில் துப்பாக்கியை எடுத்து சித்தார்தா சங்கரிடம் கொடுக்கும் காட்சி இருக்கும். திரையில் இந்த காட்சி வரும்போத
-
மிராய் திரைவிமர்சனம்
15 Sep 2025பேரரசர் அசோகர் சாகாவரம் பெறக்கூடிய ரகசியங்களை 9 புத்தகங்களில் எழுதி அதனை ஒரு இடத்தில் மறைத்து வைக்கிறார்.
-
விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் : கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து
15 Sep 2025மாானமதுரை : விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் 'அன்புக்கரங்கள' திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்
15 Sep 2025சென்னை, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 2000 உதவித்தொகை வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (செப். 15) தொடக்கி வைத்தார்.
-
தங்கம் விலை சற்று சரிவு
15 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (செப். 15) சவரனுக்கு ரூ. 80 குறைந்து விற்பனையானது.
-
குமாரசம்பவம் திரைவிமர்சனம்
15 Sep 2025இயக்குநராக வேண்டும் என்ற என்னத்தில் பயணிக்கும் நாயகன் குமரன் தியாகராஜன் வீட்டில் திடீர் மரணம் ஒன்று நிகழ்கிறது.
-
பாம் திரைவிமர்சனம்
15 Sep 2025ஒற்றுமையாக இருந்து பிரிந்த இரண்டு கிராம மக்கள் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.
-
சக்தி திருமகன் படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா
15 Sep 2025விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன்னனோட்டம் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
-
இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது: அமெரிக்காவுக்கு ரஷ்யா பதில்
15 Sep 2025மாஸ்கோ : எண்ணை வாங்கும் விவகாரம் தொடர்பாக இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது என்று அமெரிக்காவுக்கு ரஷ்யா கூறியுள்ளது.
-
பிளாக்மெயில் திரைவிமர்சனம்
15 Sep 2025மருந்து கடை சப்ளையராக வேலை செய்யும் ஜி.வி.பிரகாஷ் செய்யாத குற்றத்திற்காக தன் கடை உரிமையாளருக்கு ரூ.50 லட்சம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்.
-
பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிட்டார் ராகுல் காந்தி
15 Sep 2025பஞ்சாப் : பஞ்சாபின் அமிர்தசரஸில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கலந்துரையாடினா
-
எங்களுடைய அடிப்படையே பதவி அல்ல, பொறுப்புதான்: 'அன்பு கரங்கள்' திட்ட தொடக்க விழாவில் முதல்வர் பேச்சு
15 Sep 2025சென்னை, அரசியல் என்பது மக்கள் பணி. அது கடுமையான பணி.
-
பீகாரில் தொகுதி பங்கீட்டில் இழுபறி: 243 தொகுதிகளிலும் போட்டியிட தேஜஸ்வி யாதவ் அதிரடி முடிவு
15 Sep 2025பாட்னா : பீகாரில் தொகுதி பங்கீட்டில் இழுபறி 243 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
-
ஆசிய கோப்பை 6-வது லீக்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
15 Sep 2025துபாய் : ஆசிய கோப்பை 6-வது லீக் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
பார்லி.யில் காப்பீட்டு திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுவது எப்போது? - நிர்மலா சீதாராமன் பதில்
15 Sep 2025புதுடெல்லி : காப்பீட்டு திருத்த மசோதா எப்போது தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
-
முதல்முறையாக ராமதாஸ் மகள் பா.ம.க. கூட்டத்தில் பேச்சு
15 Sep 2025கிருஷ்ணகிரி : முதல்முறையாக டாக்டர் ராமதாசின் மகள் பா.ம.க. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
-
வரி - தடைகளை விதிப்பதால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது : அதிபர் ட்ரம்புக்கு சீனா பதிலடி
15 Sep 2025பீஜிங் : வரி-தடைகளை விதிப்பதால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்று ட்ரம்புக்கு சீனா கூறியுள்ளது.
-
சென்னையில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கக்கோரி காவல்துறையிடம் மனு
15 Sep 2025சென்னை, சென்னையில் த.வெ.க. தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள அனுமதிகோரி கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
-
மும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை: சிவப்பு எச்சரிக்கை
15 Sep 2025மும்பை : மும்பையில் கொட்டித் தீர்த்த கனமழையால் அந்த பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
கொடைக்கானல் அருகே 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்: 12 பேர் காயம்
15 Sep 2025கொடைக்கானல் : கொடைக்கானல் அருகே 100 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
பேரறிஞர் அண்ணா என்றால் தமிழ்நாடு, தமிழ், திராவிடம் எடப்பாடி பழனிசாமி புழஞ்சலி
15 Sep 2025சென்னை, சந்தேக கேள்விகளுக்கு தன் செயலால், சாதனையால் பதில் சொன்ன தென்னாட்டுத் தென்றல் என்று அண்ணாவுக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ள எடப்பாடி பழனிசாமி, அண்ணா என்றால் தமிழ்நாட