எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அமராவதி : மிக்ஜாம் புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரதமருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில்,
தற்போதைய நிலையில் மிக்ஜாம் புயல் பாதிப்பு ஆந்திராவை மட்டும் இல்லாமல் அண்டை மாநிலமான தமிழகத்தையும் கடுமையாக பாதித்துள்ளது என்பதை கணக்கில் கொண்டு மிக்ஜாம் புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். முதற்கட்ட மதிப்பீட்டின் படி, 770 கி.மீ. தூரத்துக்கான சாலைகள் சேதமடைந்துள்ளன.
குடிநீர், மின்சாரம், பாசனம் போன்ற பிற வசதிகளுடன் ரூ.10,000 கோடி மதிப்பிலான பயிர்களும் நாசமடைந்துள்ளன. எனவே, பாதிப்புகளை மதிப்பிடுவதற்காக மத்திய குழுவினை அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சித் தலைவரின் வேண்டுகோள் படி, மிக்ஜாம் பாதிப்புகள் தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டால், உடனடி நிவாரணத் தேவைகளுக்கான முயற்சிகள் வேகமடைவதுடன் நீடித்த மற்றும் நீண்டகால உட்கட்டமைப்புகள் நிறுவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


