எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,மே.3 - எண்டோசல்பான் பூச்சி கொல்லி மருந்துக்கு தடைவிதிக்கக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் எண்டோசல்பானும் ஒன்றாகும். இந்த மருந்தை பயன்படுத்துவதால் மனிதர்களுக்கு கேடு விளைவிக்கிறது என்று கூறி எண்டோசல்பானை பயன்படுத்த கேரள அரசு தடை விதித்துள்ளது. மேலும் இந்த மருந்தை நாடுமுழுவதும் பயன்படுத்த தடை செய்ய வலியுறுத்தி கேரள முதல்வர் அச்சுதானந்தன் தலைமையில் உண்ணாவிரதம் இருந்தனர். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தில் அமைச்சர்கள், இடதுகம்யூனிஸ்ட் தலைவர்களும் கலந்துகொண்டனர். அதனையடுத்து இடதுசாரி கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்திற்கு அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். கேரளாவில் ஒரு நாள் கடை அடைப்பு போராட்டத்தையும் அரசு நடத்தியது. மேலும் எண்டோசல்பான் மருந்துக்கு நாடு முழுவதும் தடைவிதிக்கக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் பொதுநலன் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் எஸ்.எச்.கபாடியா, கே.எஸ்.ராதாகிருஷ்ணன்,ஸ்வதேந்தர் குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது மத்திய அரசுக்கு நோட்டீசு அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். அடுத்த விசாரணை வரும் 11-ம் தேதி நடைபெறும் என்றும் அப்போது கோர்ட்டுக்கு உதவ மத்திய அரசின் சொலிசிஸ்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


