முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி.தேர்தல்: நாம் தமிழர் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சனிக்கிழமை, 27 ஜனவரி 2024      தமிழகம்      அரசியல்
Seeman 2023 01 22

சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் நெல்லை மற்றும் தென்காசி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி முதல்கட்டமாக அறிவித்துள்ளது. 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பாளையங்கோட்டையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. 

முதற்கட்டமாக நெல்லை மற்றும் தென்காசி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. நெல்லை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சத்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

அதே போல, தென்காசி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக மயிலை ராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, மண்டல வாரியாக ஆலோசனை கூட்டம் நடத்தி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து