எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லக்னோ : அயோத்தியில் திறப்பு விழாவிற்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ராமர் கோவில் பணிகள் வரும் 15-ம் தேதி மீண்டும் ஆரம்பமாகின்றன.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடம் என்று நம்பப்படும் பகுதியில் 7.2 ஏக்கர் பரப்பளவில் 3 மாடி அமைப்புகளை கொண்ட பிரம்மாண்ட ராமர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பால ராமர் சிலைக்கு உயிரூட்டும் பிராண பிரதிஷ்ட நிகழ்ச்சி கடந்த 22-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட தலைவர்கள், மடாதிபதிகள், திரையுலகினர், விளையாட்டு பிரமுகர்கள் என ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் வசந்த காலத்தை வரவேற்கும் வசந்த பஞ்சமி விழா வரும் 14-ம் தேதி கொண்டாடப்படும் என ராமர் கோவிலை கட்டி வரும் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அறிவித்துள்ளது. அதற்கு அடுத்த நாளான 15-ம் தேதியன்று ராமர் கோவில் பணிகள் மீண்டும் தொடங்க உள்ளதாக அறக்கட்டளை உறுப்பினராக அணில் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ராமர் கோவிலின் முதல் தளத்தில் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 2-வது மற்றும் 3-வது தளத்திற்கான பணிகள் மீண்டும் தொடங்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ராமர் கோவில் பணிகள் மீண்டும் தொடங்குவதை முன்னிட்டு கோவிலின் பின்புறம் ராட்ச கிரேன்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. ராமர் கோவில் திறப்பு விழாவிற்காக ஒரு மாத விடுமுறையில் சென்ற 3,500 தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவதால் அவர்களுக்கான முகாம்கள் தயாராகி வருகின்றன. ராமர் கோவில் கட்டுமான பணிகள் முடிவடைய 2 ஆண்டுகள் ஆகலாம் என்று கருதப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


