எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
காசா : இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் மகன் ஹாசெம் இஸ்மாயில் ஹனியே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. 125 நாட்களுக்கும் மேலாக நடைபெறும் இப்போரில் இஸ்ரேலிய ராணுவ படை பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் மறைந்திருப்பதாக சந்தேகிக்கும் இடங்களில் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை நடத்தி வருகிறது. தற்போது வரை சுமார் 28,000 பேர் காசாவில் உயிரிழந்து விட்டனர்; அப்பகுதி மக்களில் பாதிக்கும் மேல் அங்கிருந்து வெளியேறி விட்டனர்.
இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் மகன் ஹாசெம் இஸ்மாயில் ஹனியே இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
22 வயதான ஹாசெம் ஒரு கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் - ஹமாஸ் போரில் முன்னரே, ஹனியே குடும்பத்தை சேர்ந்தவர்கள் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


