எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சேலம் : மாநில மக்களையும், மொழி உணர்வையும் மதிக்கும் அரசாக மத்தியில் உருவாக்க வேண்டும். அதன் அடிப்படையில் இந்த பாராளுமன்ற தேர்தலை அனைவரும் இணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வியாபாரிகள், தொழில் முனைவோர், நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் உட்பட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கருத்து கேட்டு வருகிறார்கள்.
கோவையில் நேற்று முன்தினம் கருத்து கேட்பு நிகழ்ச்சி நடந்த நிலையில் நேற்று சேலம் 5 ரோடு ஜென்னிஸ் கேட்வே ஓட்டலில் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
இதில் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் தி.மு.க. விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், வர்த்தகர் அணி துணை தலைவர் கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., அயலக அணி செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி., மருத்துவ அணி செயலாளர் டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்ட அறிக்கை தயாரிக்கும் குழுவினர் பங்கேற்றனர்.
கருத்து கேட்பு கூட்டத்தில் நாமக்கல் முட்டை கோழி பண்ணையாளர்கள், லாரி உரிமையாளர்கள், பஸ் உரிமையாளர்கள் சங்கம் , துணி ஏற்றுமதியாளர்கள், பட்டு உற்பத்தியாளர்கள், கைத்தறி உற்பத்தியாளர்கள், தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் உரிமையாளர்கள், டிரெய்லர் உரிமையாளர்கள், மோட்டார் மெக்கானிக் சங்கம், பழங்குடியினர் மக்கள் சங்கம், பால் உற்பத்தியாளர் சங்கம், அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம், வியாபாரிகள் சங்கம், நெசவாளர் சங்கம், நூல் உற்பத்தியாளர் சங்கம், மரவள்ளி கிழங்கு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்களை சார்ந்தவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தங்களது கருத்துக்களை மனுவாக வழங்கினர்.
அப்போது முக்கிய கருத்துக்களை அவர்கள் நேரடியாக நிர்வாகிகளிடம் தெரிவித்தனர். அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்து தேர்தல் அறிக்கையில் சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக குழுவினர் உறுதி அளித்தனர்.
அதை தொடர்ந்து கனிமொழி எம்.பி. பேசியதாவது,
தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்டு அறிந்து நேரடியாக பெற்று தேர்தல் அறிக்கை தயாரிக்க வேண்டும் என்று எங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் அனைத்து தரப்பினர் கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்வதுடன் சில முக்கியமானவற்றை நேரடியாக எங்களிடம் தெரிவிக்கலாம்.
தொழில் அதிபர்கள், வியாபாரிகள், விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்து வருகிறது. வெள்ள நிவாரணம் கொடுக்க மறுத்து வருகிறது. மத்திய அரசின் ஜி.எஸ்.டி.யால் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பல குழப்பங்கள் அதில் இருக்கிறது.
ஆனால் மத்திய அரசு இதை கண்டு கொள்ளவில்லை. கோரிக்கையை காது கொடுத்து கேட்கவும் தயாராக இல்லை.மத்திய அரசு நாம் சொல்வதை கேட்கும் அரசாக அமைய வேண்டும். மக்களை ஒருங்கிணைத்து அழைத்து செல்லும் அரசாக அது இருக்க வேண்டும்.
ஒற்றுமையான மத்திய அரசாக , வேலைவாய்ப்பு உருவாக்கும் அரசாங்கமாக உரிமைகளை மதிக்கும் அரசாக இருக்க வேண்டும். மக்களையும், மொழி உணர்வையும் மதிக்கும் அரசாக உருவாக்க வேண்டும். அதன் அடிப்படையில் இந்த பாராளுமன்ற தேர்தலை அனைவரும் இணைந்து எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு கனிமொழி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தி.மு.க.வுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது: அமைச்சர் துரைமுருகன்
16 Mar 2026சென்னை, வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத்தேர்தல் அதிகாரி ஆலோசனை
16 Mar 2026சென்னை, தமிழக பேரவைத் தேர்தலையொட்டி அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நேற்று (மார்ச் 16) ஆலோசனை மேற்கொண்டார்.
-
மகளிா் ஆதரவு இருக்கும் வரை, தி.மு.க. அரசை எவராலும் வீழ்த்த முடியாது: முதல்வர்
16 Mar 2026சென்னை, பெண்கள் நம்முடன் இருக்கும்போது, நம்மை யாராலும் வீழ்த்த முடியாது.
-
6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சீனா-வடகொரியா இடையே விமான சேவை தொடக்கம்
16 Mar 2026பெய்ஜிங், சீனா- வடகொரியா இடையேயான விமானப் போக்குவரத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டில் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
-
ஈரானில் இருந்து மீட்கப்பட்ட 550 இந்தியர்கள் ஆர்மீனியாவுக்கு ஜெய்சங்கர் நன்றி
16 Mar 2026புதுடெல்லி, ஈரானில் இருந்து அர்மீனியா வழியாக 550க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
-
சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்
16 Mar 2026லாஸ்ஏஞ்சல்ஸ், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நேற்று நடைபெற்ற ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை ஒன் பேட்டில் ஆஃப்டர் அனத
-
பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்: ஆஸ்கர் விழா மேடையில் ஹாலிவுட் நடிகர் ஜேவியரின் பேச்சால் பரபரப்பு
16 Mar 2026லாஸ்ஏஞ்சல்ஸ், ஹாலிவுட் நடிகர் ஜேவியர் பார்டெம் ஆஸ்கர் விருது விழாவில், “போர் வேண்டாம். பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்” எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


