முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷார்ஜாவில் திரை நட்சத்திரங்கள்

திங்கட்கிழமை, 19 பெப்ரவரி 2024      சினிமா
Sharja 2023-02-19

Source: provided

செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (சிசிஎல்) ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. 

இந்த ஆண்டுக்கான செலிபிரிட்டி கிரிக்கெட் லீக், வரும் பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவில் நடைபெற்று வந்த இந்த கிரிக்கெட் போட்டி முதல் முறையாக ஷார்ஜாவிலும் நடைபெற உள்ளது. மேலும், ஐதராபாத், சண்டிகர், திருவந்தபுரம் ஆகிய பகுதிகளிலும் இப்போட்டிகள் நடைபெருகிறது.

சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், பெங்கால் டைகர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பஞ்சாப் தி ஷெர் ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் இப்போட்டியை தென்னிந்தியாவில் ஸ்டார் நெட்வொர்க் ஒவ்வொரு மொழிகளிலும் தனித்தனியாக ஒளிபரப்பு செய்கிறது. தமிழில் விஜய் சூப்பர் சேனலில் போட்டிகள் தொடர்ந்து ஒளிபரப்பாகும். மேலும், டிடி ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமாஸ் 20 போட்டிகளை ஒளிபரப்பு செய்கிறது.

இந்த நிலையில், தமிழ் சினிமா அணியான சென்னை ரைனோஸ் அணியினர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, பிப்ரவரி 25 ஆம் தேதி தங்களது முதல் போட்டி ஷார்ஜாவில் நடைபெற இருப்பதை அறிவித்தார்கள். இந்த போட்டியில் சென்னை ரைனோஸை, பஞ்சாப் அணி எதிர்கொள்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து