எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் விதர்பா, கர்நாடகா, மும்பை, பரோடா, தமிழ்நாடு, சவுராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறின. இந்நிலையில் ரஞ்சி டிராபி தொடரின் காலிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின. இதில் 3வது காலிறுதி ஆட்டத்தில் தமிழக அணி சவுராஷ்டிராவை கோவையில் எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சவுராஷ்டிரா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கெவின் ஜிவ்ரஜனி மற்றும் ஹர்விக் தேசாய் ஆகியோர் களம் இறங்கினர். இதில் தேசாய் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன.
இதில் கெவின் ஜிவ்ரஜனி 0 ரன், அடுத்து களம் இறங்கிய ஜாக்சன் 22 ரன், புஜாரா 2 ரன், வாசவதா 25 ரன், பிரேரக் மன்கட் 35 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்விக் தேசாய் அரைசதம் அடித்த நிலையில் 83 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதியில் வெறும் 77.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த சவுராஷ்டிரா அணி தனது முதல் இன்னிங்சில் 183 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. தமிழகம் தரப்பில் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகள், அஜித் ராம் 3 விக்கெட், வாரியர் 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 10 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 23 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 2-ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
அஸ்வினின் புதிய உலக சாதனை
இந்திய சுழல்பந்து வீச்சாளர் ரவி அஸ்வின் இங்கிலாந்துக்கு எதிராக புதிய சாதனை படைத்துள்ளார். 2011 ஆம் ஆண்டு டெஸ்ட்டில் அறிமுகமான அஸ்வின் சமீபத்தில் தனது 97-வது போட்டியில் 500-வது விக்கெட்டை கைப்பற்றி சாதனைப் படைத்திருந்தார். டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 4வது போட்டியில் பெயர்ஸ்டோவின் விக்கெட்டினை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிராக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 1000 ரன்கள், 100 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் (23 போட்டிகளில்) அஸ்வின் இரண்டாமிடம் வகிக்கிறார். இதற்கு முன்பாக ஆஸிக்கு எதிராக இயான் போதம் 22 போட்டிகளில் சாதனை படைத்துள்ளார்.
அறிமுகப் போட்டியில் அசத்தல்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இந்திய வேகப் பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் அசத்தி வருகிறார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நேற்று (பிப்ரவரி 23) முதல் ராஞ்சியில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. அதன்பின் இங்கிலாந்தின் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன.
இந்தப் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக இளம் வீரர் ஆகாஷ் தீப்புக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தனது அறிமுகப் போட்டியிலேயே இங்கிலாந்தின் டாப் ஆர்டர் பேட்டர்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். முதல் ஸ்பெல்லில் 7 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார். இவர் ஐபிஎல்-இல் ஆர்சிபி அணியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 112/5 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. ஆகாஷ் தீப் 3, அஸ்வின் 1, ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.
இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் விலகல்
இங்கிலாந்து அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளரான ரிஹான் அகமது தனிப்பட்ட காரணங்களுக்காக தாயகம் திரும்பியுள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நேற்று (பிப்ரவரி 23) தொடங்கியது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளரான ரிஹான் அகமது அணியில் இடம்பெறவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இங்கிலாந்து திரும்புவதாகவும், மீதமுள்ள போட்டிகளில் அவர் அணியில் இடம்பெற மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: தனிப்பட்ட காரணங்களுக்காக ரிஹான் அகமது உடனடியாக இங்கிலாந்துக்கு திரும்பவுள்ளார். அவர் இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாட வரமாட்டார். அவருக்குப் பதிலாக இங்கிலாந்து அணியில் சோயிப் பஷீர் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ரிஹான் அகமது 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எல்.லில் ரிஷப் பந்த்
அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடருக்கு ரிஷப் பந்த் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர்களில் ஒருவரான பார்த் ஜிண்டால் தெரிவித்துள்ளார். கார் விபத்தில் சிக்கி காயமடைந்த இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த் தற்போது முழுவதுமாக குணமடைந்துள்ளார். அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்பார் என ஏற்கனவே ரிக்கி பாண்டிங் கூறியிருந்தார். இந்த நிலையில், அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடருக்கு ரிஷப் பந்த் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர்களில் ஒருவரான பார்த் ஜிண்டால் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரிஷப் பந்து பேட்டிங் செய்கிறார். நன்றாக ஓடுகிறார். விக்கெட் கீப்பிங் செய்யவும் ஆரம்பித்துள்ளார். அவர் முழு உடல் தகுதியுடன் இருப்பதால் இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாடுவார். முதல் 7 ஆட்டங்களில் ரிஷப் பந்த் பேட்ஸ்மேனாக மட்டுமே களமிறக்கப்பட உள்ளார். அவர் உடல் நலனைப் பொறுத்து நாங்கள் தேவையான முடிவுகளை எடுப்போம் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
விபி ஜி ராம் ஜி திட்டம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று சிறப்புத் தீர்மானம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Jan 2026சென்னை, விபி ஜி ராம் ஜி திட்டம் தொடர்பாக இன்று (ஜன. 23) தமிழக பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் தே.ஜ. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
22 Jan 2026சென்னை, மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது, விரைவில், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
கடலோர தமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்பு
22 Jan 2026சென்னை, கடலோர தமிழகத்தில் இன்று (ஜன. 23) முதல் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
23 கால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்து வைத்தது தி.மு.க.தான்: ஆசிரியர்களின் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
22 Jan 2026அரசு ஊழியர்களின் 23 கால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்து வைத்தது தி.மு.க.தான் என்று தமிழ்நாடு சட்டசபையில் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு ஊழ
-
மின் பேருந்துகள் லாபத்தில் இயங்குகின்றன - அமைச்சர்
23 Jan 2026சென்னை, மின்சார பேருந்துகள் லாபகரமாக ஓடுகிறது என சட்டசபையில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
-
இன்று ம.நீ.ம.செயற்குழு கூட்டம்
23 Jan 2026சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுவதாக கமல்ஹாசன் தெரிவித்தார்.
-
அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. இணையுமா..? செங்கோட்டையன் பதில்
23 Jan 2026சென்னை, பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. இணையுமா என்பது குறித்து செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
-
ஜம்மு-காஷ்மீரில் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம்
23 Jan 2026சென்னை, ஜம்மு காஷ்மீரில் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
மதுராந்தகம் வந்த பிரதமர் மோடி: இ.பி.எஸ். உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் உற்சாக வரவேற்பு
23 Jan 2026செங்கல்பட்டு, மதுராந்தகம் வந்த பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
-
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான தோ்வெண்ணுடன் கூடிய பெயா் பட்டியல் வெளியீடு
23 Jan 2026சென்னை, தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதவுள்ள பள்ளி மாணவா்களுக்கு தோ்வு எண்ணுடன் கூடிய பெயா்ப் பட்டியலை தோ்வுத் துறை வெளியிட்டுள்ளது.
-
தமிழ்நாடு தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இருக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பதிவு
23 Jan 2026புதுடெல்லி, தமிழ்நாடு தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இருக்கிறது என்றும் தி.மு.க அரசுக்கு விடை கொடுக்க தமிழக மக்கள் முடிவு செய்துள்ளனர் என்றும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
-
நாகாலாந்தில் நிலநடுக்கம்
23 Jan 2026நாகலாந்த், நாகாலாந்தில் வெள்ளிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 4.0-ஆக பதிவாகியுள்ளது.
-
திருவண்ணாமலையில் புதிய விமான நிலையம் அமையுமா? அமைச்சர் சிவசங்கர் பதில்
23 Jan 2026சென்னை, திருவண்ணாமலையில் விமான நிலையம் அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்துள்ளார்.
-
குஜராத் போல கேரளத்திலும் பா.ஜ.க. ஆட்சி: பிரதமர் மோடி
23 Jan 2026திருவனந்தபுரம், குஜராத்தை போல கேரளத்திலும் பா.ஜ.க. ஆட்சியமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க.வில் இணைந்தது ஏன்..? மாணிக்கராஜா விளக்கம்
23 Jan 2026சென்னை, அ.ம.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தது குறித்து மாணிக்கராஜா விளக்கம் அளித்துள்ளார்.
-
டி.டி.வி. தினகரனுடன் கை குலுக்கிய இ.பி.எஸ்.
23 Jan 2026செங்கல்பட்டு, தேசிய ஜனநாயக பொதுக்கூட்டத்தில் டி.டி.வி. தினகரனுடன் கை குலுக்கிய எடப்பாடி பழனிசாமி கை குலுக்கிக் கொண்டனர்.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பில் கேட்க வேண்டிய 33 கேள்விகள் மத்திய அரசு வெளியீடு
23 Jan 2026டெல்லி, மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது குடிமக்களிடம் கேட்க வேண்டிய 33 கேள்விகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
-
இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கு: டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல்
23 Jan 2026புதுடெல்லி, இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கு குறித்து தேர்தல் ஆணையம் டெல்லி ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தது.
-
3.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ வளாகத்தில் பூங்கா: துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்
23 Jan 2026சென்னை, ரூ. 3.50 கோடி மதிப்பீட்டில் மெட்ரோஸ் பூங்காவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
வடக்கில் சரிசெய்துவிட்டு பிரதமர் தெற்கே வரட்டும்: காங்கிரஸ் கட்சி விமர்சனம்
23 Jan 2026திருவனந்தபுரம், வட மாநிலங்களில் உள்ள பிரச்னைகளைத் தீர்த்துவிட்டு, தென் மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கட்டும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
-
திருவனந்தபுரம் - தாம்பரம் உள்பட 3 அம்ருத் பாரத் ரயில்களை துவக்கி வைத்தார் பிரதமர்
23 Jan 2026திருவனந்தபுரம், திருவனந்தபுரம் சென்டிரல் ரயில் நிலையத்தில் நேற்று காலை நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, திருவனந்தபுரம்- தாம்பரம் அம்ரித் பாரத் அறிம
-
ஜனநாயகன் பட வழக்கில் வருகிற 27-ம் தேதி தீர்ப்பு
23 Jan 2026சென்னை, ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்று தொடர்பான வழக்கில் வரும் செவ்வாய்க்கிழமை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.


