எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : மாநில அளவில் கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மன்னார்குடி தூய வளனார் பெண்கள் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதக்கம் அணிவித்து கோப்பை, சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.
மன்னார்குடி தூய வளனார் பெண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டும் நிகழ்வு நேற்று (26.02.24) நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கலந்து கொண்டார். மேலும், மன்னை நகர மன்ற தலைவர் சோழராஜன், மன்னை நகர திமுக செயலாளர் வீரா. கணேசன், மன்னை நகரின் முக்கிய பிரமுகர் கு.பா.பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் அமைச்சர் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை தா. ஜெபமாலை பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார். மேலும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, தலைமை ஆசிரியை ஜெபமாலைக்கு சந்தன மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். மேலும், மாநில அளவில் கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதக்கம் அணிவித்து கோப்பை, சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் வழங்கி பாராட்டினார். நிகழ்வில் மாணவிகளை பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள், அருட் சகோதரிகள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


