முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துருவ்-சுப்மன் கில் அபாரம்: இங்கிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2024      விளையாட்டு
Dhruv 2024-02-12

Source: provided

ராஞ்சி : துருவ்-சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தால் ராஞ்சியில் நடந்த இங்கிலாந்திற்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. மேலும் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது.

307 ரன்களுக்கு... 

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் சோயிப் பஷீர் 5 விக்கெட்டும், டாம் ஹார்ட்லீ 3 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

3-வது நாள் ஆட்டம்...

2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் சுழலில் 53.5 ஓவர்களில் 145 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அந்த அணி கடைசி 35 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை தாரைவார்த்தது கவனிக்கத்தக்கது. இந்திய தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும் சாய்த்தனர். இதன் மூலம் இந்திய அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன் எடுத்திருந்தது. கேப்டன் ரோகித் சர்மா 24 ரன்னுடனும் (27 பந்து, 4 பவுண்டரி), ஜெய்ஸ்வால் 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

4-வது நாள் ஆட்டம்...

இந்நிலையில் 4-வது நாள் நேற்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஜெய்ஸ்வால் 37 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ரோகித் அரை சதம் அடித்து அவுட் (55) ஆனார். அடுத்து வந்த பட்டிதார் 6 பந்துகளை சந்தித்து 0 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ஜடேஜா 4 ரன்னிலும் சர்ப்ராஸ் கான் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 120 ரன்னில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து கில்- துருவ் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய கில் அரை சதம் அடித்து அசத்தினார். இறுதியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இங்கிலாந்து தரப்பில் பஷிர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. 

விராட் கோலி பாராட்டு

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தி உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, ஆம். எங்கள் இளம் அணிக்கு அற்புதமான தொடர் வெற்றி. துணிவு, உறுதிப்பாடு மற்றும் நெகிழ்ச்சி ஆகியவற்றைக் காட்டியது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 17 வெற்றிகள்

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 7-ஆம் தேதி தர்மசாலா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கிடையே ராஞ்சியில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் இந்த தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதன்ன் மூலம் உள்ளூரில் தொடர்ந்து இந்தியா வெற்றி பெறும் 17-வது டெஸ்ட் தொடராக அமைந்துள்ளது. இதற்கு முன்னதாக 2012-ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்திடம் தொடரை இழந்தது. அதன்பிறகு இந்திய அணி உள்ளூரில் விளையாடிய 17 தொடர்களில் எதிர்கொண்ட 50 போட்டிகளில் 39 போட்டிகளில் வென்று 17 தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து