முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் சமாஜ்வாடி கட்சி கொறடா திடீர் ராஜினாமா

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2024      இந்தியா
Akhilesh yadav

Source: provided

லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் கட்சி மாறி வாக்கு ஊகங்களால், சமாஜ்வாதி கட்சியின் கொறடா மனோஜ் குமார் பாண்டே நேற்று  (செவ்வாய்) காலை தனது கொறடா பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் ரேபரேலி மாவட்டத்தின் உஞ்சகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராவார்.

முன்னதாக, மாநிலத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சர் தயாசங்கர் சிங்கை மனோஜ் குமார் சந்திக்கச் சென்றார். அப்போது அவர் கூறுகையில், 

கொறடா பதவியிலிருந்து விலகும் எனது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்ளும் படி கட்சித் (சமாஜ்வாதி கட்சி) தலைமையிடம் கேட்டுள்ளேன் என்று கூறினார். 

மனோஜ் குமாரின் சந்திப்புக்கு பின்னர் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் தயாசங்கர் சிங், பிரதமர் மோடியின் கொள்கைகளால் நாட்டில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளால் ஈர்க்கப்பட்ட பலர் பா.ஜ.க.வில் இணைந்து கொண்டிருக்கின்றனர். 

மனோஜ் பாண்டே எப்போதுமே சனாதனத்தின் ஆதரவாளராக இருந்துள்ளார். இது குறித்த சட்டப்பேரவைக்கு உள்ளேயும் வெளியேயும் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதனால் அவர் அங்கு மகிழ்ச்சி இல்லாமலே இருந்தார். ராமரை தரிசிக்க அழைப்பு வந்த போது அனைவரும் ராமரை தரிசிக்கச் செல்ல வேண்டும் என்று அவர் விரும்பினார் என்று தெரிவித்தார்.  

முன்னதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று கூறுகையில், எங்கள் கட்சியின் 3 உறுப்பினர்களும் வெற்றி பெறுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தத் தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க. அனைத்து யுக்திகளையும் கையாளுகிறது. வெற்றிக்குத் தேவையான அனைத்தையும் பா.ஜ.க. செய்யும். சொந்த லாபத்தை விரும்பும் எங்கள் கட்சித் தலைவர்கள் சிலர் பா.ஜ.க.வுக்குச் செல்லலாம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து