எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னையில் இன்று 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
இன்று காலை 10 மணி முதல் மாலை 3.30 மணி வரை தாம்பரம் – சென்னை கடற்கரை வரை கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வரும் ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை ரயில்வே தண்டவாளங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே இரு மார்க்கத்திலும் சுமார் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால், பொதுமக்கள் வசதிக்காக மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கவும், மெட்ரோ ரயில்களைக் கூடுதலாக இயக்கவும், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ரயில்வே நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நான்காவது வாரமாக ரயில்வே தண்டவாள பராமரிப்புப் பணிக்காக இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (பிப்.03) காலை 10 மணி முதல் மாலை 3.30 வரை தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை இயங்கும் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அந்த வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 150 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


