முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தர்மசாலா டெஸ்ட் போட்டி: ரோகித் புதிய சானை படைக்க வாய்ப்பு

சனிக்கிழமை, 2 மார்ச் 2024      விளையாட்டு
Rohit-Sharma 2023 08-07

Source: provided

தர்மசாலா : தர்மசாலா டெஸ்ட் போட்டியில் ரோகித் புதிய சானை படைக்க வாய்ப்புள்ளது.

கடைசி போட்டி...

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 7-ம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ளது.

58 போட்டிகளில்... 

இந்த போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா முன்னாள் வீரரான கவுதம் கம்பீரின் வாழ்நாள் சாதனை ஒன்றினை முறியடிக்க வாய்ப்புள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:- இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 58 போட்டிகளில் விளையாடியுள்ள கவுதம் கம்பீர் 4,154 ரன்கள் அடித்துள்ளார். இதன் மூலம் அதிக டெஸ்ட் ரன்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் 16-வது இடத்தில் உள்ளார்.

17-வது இடத்தில்... 

அவருக்கு அடுத்து ரோகித் சர்மா 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,035 ரன்களுடன் 17-வது இடத்தில் உள்ளார். இந்நிலையில் இந்த 5-வது போட்டியில் ரோகித் சர்மா மேலும் 120 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் கவுதம் கம்பீரின் வாழ்நாள் சாதனையை முறியடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் 16-வது இடத்தை பிடிப்பார். ஒருவேளை இந்த போட்டியில் அவரால் இதனை செய்ய முடியவில்லை என்றால் இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இந்திய அணிக்கு அடுத்த சில மாதங்களுக்கு டெஸ்ட் போட்டிகள் கிடையாது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து