Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவில் மீண்டும் பிரதமராகிறார் கெவின்ரூத்

வியாழக்கிழமை, 27 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

 

சிட்னி, ஜூன். 28 - ஆஸ்திரேலியாவில் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற வாக்குப்பதிவில் தற்போதைய பிரதமர் கிலார்ட் தோல்வியடைந்ததை முன்னிட்டு அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதிக வாக்குகளைப் பெற்ற முன்னாள் பிரதமர் கெவின் ரூத் மீண்டும் பிரதமராகிறார். ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. 2010 ம் ஆண்டு பிரதமராக இருந்த இதே தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவரான கெவின்ரூத் பதவி விலகலை அடுத்து, ஜூலியா கிலார்டு பிரதமராக பொறுப்பேற்றார். தற்போது நடை பெற்று வரும் தொழிலாளர் கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் முடிந்து வரும் செப்டம்பர் 14 ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. 

இந்நிலையில் சமீப காலமாக, ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு சரிந்து வருகிறது. இதன் விளைவாக கிலார்டு தலைமையிலான ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது, 72 எம்.பி.க்களை கொண்ட முக்கிய எதிர்க்கட்சித்தலைவரான டோனி அபோட் கூறுகையில், புதிய அரசு அமையுங்கள். இல்லையெனில் பொதுத்தேர்தலை அறிவியுங்கள் என கருத்து தெரிவித்தார். 

பிரதமரை மாற்றுவதன் மூலம் நிலைமையை சீராக்கலாம் என எண்ணிய தொழிலாளர் கட்சி , கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பை நேற்று முன்தினம் நடத்தியது. இத்தேர்தலில் தற்போதைய பிரதமரை எதிர்த்து முன்னாள் பிரதமர் கெவின் ருத் போட்டியிட்டார். மொத்தம் 150 எம்.பி.க்கள் உள்ள நிலையில், மக்கள் பிரதிநித்துவ சபையில் வைத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமரான கெவின்ரூத்திற்கு ஆதரவாக 57 ஓட்டுக்களும், கிலார்டுக்கு ஆதரவாக 45 ஓட்டுக்களும் கிடைத்தன. குறைவான ஓட்டுகளே கிடைத்ததால் கிலார்டு பதவி விலகுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, அதிக ஓட்டுகள் பெற்ற கெவின்ரூத் மீண்டும் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் பிரதமராக பதவி ஏற்க உள்ள கெவின்ரூத் உரையாற்றுகையில், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தேர்தல் நடைபெறும் என அறிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago