Idhayam Matrimony
முகப்பு

ரவா பொங்கல்

Cooking time in minutes: 
20
Ingredients: 

ரவா பொங்கல் செய்யத் தேவையான பொருட்கள்.

  1. பாசி பருப்பு - 200 கிராம்.
  2. ரவை  -  ஒரு கப்.
  3. மஞ்சள் தூள் - சிறிதளவு.
  4. எண்ணெய் -  4 ஸ்பூன்.
  5. நெய் - 4  ஸ்பூன்.
  6. பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு.
  7. சீரகம் - 2 ஸ்பூன்.
  8. மிளகு  -  1 ஸ்பூன்.
  9. கறிவேப்பிலை  - சிறிதளவு.
  10. பெருங்காயத் தூள் - சிறிதளவு.
  11. உப்பு –தேவையான அளவு.
Method: 

செய்முறை ;--

  1. ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி  சுத்தம் செய்த 200 கிராம் பாசி பருப்பு,சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு  கலந்து விட்டு 6 நிமிடம் நன்றாக வேக வைத்து தனியாக எடுத்து  வைத்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாய் வைத்து 4 ஸ்பூன் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெய் ஊற்றவும்.
  3. எண்ணெய் மற்றும் நெய் சூடானவுடன் பொடியாக நறுக்கிய சிறிதளவு இஞ்சி,சீரகம் 2 ஸ்பூன்,மிளகு ஒரு ஸ்பூன்,கறிவேப்பிலை சிறிதளவு போட்டு நன்றாக வதக்கவும்.
  4. இதனுடன் ரவை ஒரு கப் மற்றும் சிறிதளவு பெருங்காயத் துளை போட்டு நன்றாக கலந்து விட்டு வேக வைத்த பாசி பருப்பையும் போட்டு கலந்து விடவும்.
  5. இதனுடன் ஒரு டம்ளர் சூடான தண்ணீரை ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு கலந்து விடவும்.
  6. இதனுடன் 2 ஸ்பூன் நெய் ஊற்றி கலந்து விடவும்.
  7. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  8. சுவையான ரவா பொங்கல் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago