எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் இருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மூவரையும் இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி வழங்கியது. மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து நேற்று முன்தினம் திருச்சி முகாமில் இருந்து மூவரும் சென்னை அழைத்து செல்லப்பட்டனர்.
தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து மூவரும் நேற்று காலை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முருகன் மனைவி நளினி சென்னை விமான நிலையம் வந்து அவர்களை வழியனுப்பி வைத்தார். இதன்மூலம் கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கு பின் மூவரும் தாயகமான இலங்கைக்கு திரும்பினர்.
முன்னதாக, தாயகம் திரும்புவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் பாஸ்போர்ட் வேண்டும் என்றும் கூறி முருகன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பின்படி மூவருக்கும் பாஸ்போர்ட் மற்றும் இலங்கைக்கு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியது. அந்த அடிப்படையில் மூவரும் இலங்கைக்கு பயணமாகியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


