Idhayam Matrimony

நெய்வேலி என்.எல்.சி. போராட்டம் தொடர்ந்து நீடிப்பு

சனிக்கிழமை, 6 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

கடலூர், ஜூலை.7 - நெய்வேலி கியூ பாலம் முன்பு நேற்று அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இது குறித்த விபரம் வருமாறு: நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதை கண்டித்து கடந்த 27-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த பேராட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்த பங்கு விற்பனையை நிறுத்தக்கோரி வருகின்ற 9-ந் தேதி மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய தொழிற்சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். மேலும் ரெயில் மறியல் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களை நடத்தவும் தொழிற்சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர். 

இந்த நிலையில் நேற்று நெய்வேலி கியூ பாலத்தின் முன்பு அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் 5 சதவீத பங்குகள் விற்பதை கைவிடக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் ஏராளமான ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர். காலவரையற்ற போராட்டம் 4-வது நாளாக நீடித்து வருவதால் மின் உற்பத்தி மேன்மேலும் குறைந்து வருகிறது. மேலும் என்.எல்.சி.யில் அனைத்து பணிகளும் முடங்கி போயுள்ளது.

முன்னதாக இந்த வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து இப்போராட்டம் நேற்றும் நீடித்தது. வரும் 9 ம் தேதி முதல் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். 9 ம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தவும் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago