எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
உலகின் சிறந்த விமான நிலையமாக தோஹாவின் ஹமாத் சர்வதேச விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பல வருடங்களாக உலகின் சிறந்த விமான நிலையம் என்ற அந்தஸ்தை தக்க வைத்திருந்த சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் அந்த அந்தஸ்தை இழந்திருக்கிறது. தற்போது இது உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த விமானத் துறை ஆலோசனை நிறுவனமான Skytrax நேற்று முன்தினம் ஜெர்மனியின் பிராங்பர்ட்டில் நடந்த நிகழ்ச்சியில் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், தோஹாவின் ஹமாத் இன்டர்நேஷனல் விமான நிலையம் (கத்தார்) முதல் இடத்திலும், சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
சிங்கப்பூரின் சாங்கி இரண்டாவது இடத்தில் வந்தாலும் ஆசியாவின் தலைசிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது .அத்துடன் சாங்கி விமான நிலையம் உலகிலேயே சிறந்த குடிநுழைவுச் சேவைகளை வழங்கும் விமான நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவின் சியோல் இஞ்சியோன் விமான நிலையம் மூன்றாவது இடத்திலும், ஜப்பானின் டோக்கியோ ஹனேடா விமான நிலையம் நான்காவது இடத்திலும் உள்ளது.
உலகின் மிகச் சிறந்த விமான நிலையங்களில் ஒன்று சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம். உயரமான பகுதியில் அமைந்துள்ள விமான நிலையம் இது. நீச்சல் குளத்துடன் ஓய்வு விடுதிகள், திரையரங்கம் என பல வசதிகளைக் கொண்டுள்ளது. லாஸா ஓட்டல் இங்கு உள்ளது.
1981-ல் தொடங்கப்பட்ட இந்த விமான நிலையத்தை சிங்கப்பூர் அரசு நிர்வகித்து வருகிறது. இங்கு 3 முனையங்கள் உள்ளன. சாங்கி விமான நிலையம் 2023-ல் சிறந்த விமான நிலைய விருதை வென்றது. குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் நான்கு இந்திய விமான நிலையங்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளன. டெல்லி விமான நிலையம் பட்டியலில் 36-வது இடத்தைப் பிடித்துள்ளது. அதே நேரத்தில் மும்பை விமான நிலையம் 95-வது இடத்தில் உள்ளது. பெங்களூரு விமான நிலையம் 59-வது இடத்திலும், ஐதராபாத் விமான நிலையம் 61 வது இடத்துக்கு உயர்ந்துள்ளது.
2024-ம் ஆண்டின் உலகின் சிறந்த விமான நிலையங்கள் பட்டியலில், தோஹா - ஹமாத் விமான நிலையம், சிங்கப்பூர் - சாங்கி விமான நிலையம், சியோல் - இன்சியான் விமான நிலையம், டோக்கியோ - ஹனேடா விமான நிலையம், டோக்கியோ - நரிடா விமான நிலையம், பாரிஸ் - சார்லஸ் டி கோல் விமான நிலையம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - துபாய் விமான நிலையம், ஜெர்மனி - முனிச் விமான நிலையம், ஸ்விட்சர்லாந்து - சூரிச் விமான நிலையம், துருக்கி - இஸ்தான்புல் விமான நிலையம் ஆகியவை இடம்பிடித்துள்ளன,
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 hour ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025 -
கிருஷ்ணகிரி 5 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
-
அபராதம் இன்றி வருமான வரியை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் : வருமான வரித்துறை தகவல்
14 Sep 2025மும்பை : ‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவ
-
கிருஷ்ணகிரியில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விழா: 2,885 கோடி ரூபாயில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினா
-
ஒசூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
14 Sep 2025ஒசூர் : ஒசூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். ஒசூரில் ரோடு ஷோ சென்ற மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
அஸ்ஸாமில் ரூ. 5,000 கோடியில் மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
14 Sep 2025திஸ்பூர் : அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்கா மாவட்டத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உதவித் தொகையினை வழங்குகிறார்
14 Sep 2025சென்னை : பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர
-
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால உத்தரவு
14 Sep 2025புதுடெல்லி : மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.