எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி (இன்று) தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அந்த வகையில் தமிழக பா.ஜ.க. தலைவரும், கோவை தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான அண்ணாமலைக்கு பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;-
"எனது சக காரியகர்த்தா அண்ணாமலைக்கு ராம நவமி திருநாளில் கடிதம் எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் நலமுடன் இருப்பதாக நம்புகிறேன். ஒரு மதிப்புமிக்க வேலையை விட்டுவிட்டு மக்களுக்கு நேரடியாக சேவை செய்வதற்கு வந்துள்ள உங்கள் முடிவை நான் வாழ்த்துகிறேன். தமிழகம் முழுவதும் பா.ஜ.க.வின் அடிமட்ட இருப்பை வலுப்படுத்தவும், சட்ட அமலாக்கம், நிர்வாகம் மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளை முன்னிறுத்துவதிலும் நீங்கள் உண்மையிலேயே முக்கிய பங்காற்றியுள்ளீர்கள்.
உங்களது உறுதியான தலைமையால் கோவைக்கு மகத்தான பலன் கிடைக்கும். மக்களின் ஆசீர்வாதத்துடன் நீங்கள் பாராளுமன்றத்தை அடைவீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களைப் போன்ற குழு உறுப்பினர்கள் எனக்கு பெரும் சொத்து. நாம் ஒரே அணியாக, தொகுதி மக்களின் நலனுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் பாடுபடுவோம்.
இந்தக் கடிதத்தின் மூலம் உங்கள் தொகுதி மக்களுக்கு இது சாதாரண தேர்தல் அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா முழுவதும் உள்ள குடும்பங்கள், குறிப்பாக மூத்த குடிமக்கள், காங்கிரஸ் ஆட்சியில் தாங்கள் அனுபவித்த சிரமங்களை நினைவில் கொள்வார்கள். கடந்த 10 ஆண்டுகளில், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரின் வாழ்க்கைத் தரமும் மேம்பட்டுள்ளது. பல பிரச்சினைகள் நீக்கப்பட்டுள்ளன.
இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. அனைவருக்கும் சிறந்த வாழ்க்கையை உறுதி செய்வதற்கான எங்கள் பணியில் இந்தத் தேர்தல் முக்கியமானதாக இருக்கும். நமது நிகழ்காலத்தை ஒளிமயமான எதிர்காலத்துடன் இணைக்க இந்தத் தேர்தல் ஒரு வாய்ப்பு. தற்போது வெயிலின் தாக்கல் அதிகமாக இருக்கிறது என்பதை நான் அறிவேன். இருப்பினும் இந்த தேர்தல் நமது நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது. எனவே, அதிகாலை நேரத்திலேயே மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்திவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நாட்டு மக்களின் நலனுக்காகவே எனது நேரம் அனைத்தையும் செலவிடுகிறேன். தேர்தலில் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தனது கடிதத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


