எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெய்வேலி,ஜூலை.9 - நெய்வேலியில் இன்று அனல் மின்உற்பத்தி நிலையங்களை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்க தலைவர்கள் அறிவித்துள்ளனர். என்.எல்.சி. எனப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து அந்நிறுவன தொழிலாளர்கள் கடந்த 3-ம் தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி மற்றும் மின்உற்பத்தி ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 5 சதவீத பங்குகளை தமிழக அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்பனை செய்யலாம் என்று யோசனை தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார். நேற்றுமுன்தினம் மீண்டும் பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதினார். அதில் தனது யோசனைப்படி இந்த பிரச்சினையை அணுகுமாறு பிரதமரை முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தநிலையில் என்.எல்.சி.நிறுவன தொழிலாளர்கள் போராட்டம் நேற்றும் தொடர்ந்து நீடித்தது. மத்திய அரசு தனது முடிவை வாபஸ் பெறும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று அனைத்து தொழிற்சங்கங்களும் முடிவு எடுத்து அறிவித்தன. மேலும் இன்று அனல்மின் நிலையங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றும் தொழிற்சங்க தலைவர்கள் அறிவித்து இருக்கிறார்கள். இதையொட்டி நெய்வேலியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக தொழிற்சங்கங்களின் கூட்டம் நடைபெற்றது. அப்போது முற்றுகை போராட்டம் தொடர்பாக முடிவு செய்யப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


