எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹைதராபாத், ஜூலை.10 - செகந்தராபாத்தில் ராஷ்டிரபதி ரோட்டில் உள்ள சிட்டி லைட் ஹோட்டல் கட்டிடம் இடிந்து விழுந்த இடத்திலிருந்து மேலும் 2 சடலங்கள் மீட்கப்பட்டன. ஒருவர் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். இதையடுத்து இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. ஹோட்டல் இடிந்து விழுந்தபோது அங்கு 20 முதல் 25 பேர் இருந்தனர் என்று கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். இடிபாடுகளுக்கிடையே சிக்கிய இருவரது சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும் ஒருவரது சடலமும் மீட்கப்பட்டது என்று ஹைதராபாத் மாநகராட்சி ஆணையர் கிருஷ்ண பாபு கூறினார். இடிபாடுகளுக்குள் சிக்கிய மேலும் சிலரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய துயர் துடைப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும்போது, அவர்களுக்கு எந்தவித ஆபத்தும்நேராமல் அவர்களை மீட்க நிபுணர்கள் மிகத் தீவிரமாக அதே நேரத்தில் கவனமாக ஈடுபட்டு வருகின்றனர் என்று ஹைதராபாத் மாநகராட்சி ஆணையர் கிருஷ்ண பாபு கூறினார். இந்த கட்டடிடத்திலிருந்து 23 பேரை மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பலத்த காயமடைந்தவர்கள் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து 5 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். காயமடைந்கவர்களில் சிலரது, நிலைமை கவலைக்கிடமா உள்ளது என்றும் அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


