எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கொல்கத்தா : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி, அதை நாங்கள் எடுத்துக் கொள்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபட தெரிவித்தார்.
பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் உள்ள செராம்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் போராட்டம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
2019-ம் ஆண்டு 370-வது சட்டபிரிவை மத்திய அரசு ரத்து செய்த பிறகு காஷ்மீரில் அமைதி திரும்பியது. ஆனால் இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டங்களை நாம் காண்கிறோம். முன்பு காஷ்மீரில் கேட்ட அதே கோஷங்கள் இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கேட்கின்றன.
முன்பு காஷ்மீரில் கற்கள் வீசப்பட்டன, இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கற்கள் வீசப்படுகின்றன. மணிசங்கர் ஐயர் போன்ற காங்கிரஸ் தலைவர்கள், பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதால் நாம் எதையும் செய்யக்கூடாது என்கிறார்கள்.
ஆனால் நான் சொல்கிறேன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி, அதை நாங்கள் எடுத்துக் கொள்வோம். இண்டியா கூட்டணியின் ஊழல் தலைவர்களுக்கும், நேர்மையான அரசியல்வாதியான மோடிக்கும் இடையே மக்களவை தேர்தல் நடக்கிறது.
முதல்வராக இருந்தபோதும், பிரதமராக இருக்கும்போதும் மோடி மீது ஒரு பைசா அளவிற்கு கூட ஊழல் குற்றச்சாட்டு இல்லை. ஊடுருவல்காரர்கள் வேண்டுமா அல்லது அகதிகளுக்கு குடியுரிமை திருத்தச் சட்டம்(சி.ஏ.ஏ.) வேண்டுமா என்பதை மேற்கு வங்காள மக்கள் முடிவு செய்ய வேண்டும்.
ஜிகாத்துக்கு வாக்களிக்க வேண்டுமா, அல்லது வளர்ச்சிக்கு வாக்களிக்க வேண்டுமா என்பதை மேற்கு வங்காளம் முடிவு செய்ய வேண்டும். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சி.ஏ.ஏ.வை எதிர்த்து, தனது வாக்கு வங்கியை திருப்திப்படுத்த ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவாக பேரணிகளை நடத்துகிறார். இவ்வாறு அமித்ஷா பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


