எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : மும்பை அணியை வீழ்த்தி லக்னோ அணி ஆறுதல் வெற்றிப்பெற்றது.
மும்பை பந்துவீச்சு...
ஐ.பி.எல். தொடரில் நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. லக்னோவின் தொடக்க ஆட்டக்காரரான படிக்கல் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
ராகுல் அரைசதம்...
அவரை தொடர்ந்து களமிறங்கிய ஸ்டோய்னிஸ் 28 ரன்களிலும், ஹூடா 11 ரன்களிலும் சாவ்லா சுழலில் சிக்கினர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் ராகுல் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் 4-வது விக்கெட்டுக்கு கை கோர்த்த நிக்கோலஸ் பூரன் வந்த முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடினார். மும்பை பந்துவீச்சை வெளுத்து வாங்கிய பூரன் 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த கே.எல். ராகுலும் 37 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
214 ரன்கள் குவிப்பு...
அரைசதம் அடித்த பிறகும் தொடர்ந்து அதிரடியில் மிரட்டிய பூரன் 75 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அர்ஷத் கான் டக் அவுட்டிலும், கே.எல். ராகுல் 55 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் பதோனி 22 ரன்களும் (10 பந்துகள்), குருனால் பாண்ட்யா 12 ரன்களும் (7 பந்துகள்) அடித்தனர். 20 ஓவர்கள் முடிவில் லக்னோ 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 75 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் அதிகபட்சமாக நுவான் துஷாரா மற்றும் சாவ்லா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.இதனையடுத்து 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி மும்பை பேட்டிங் செய்தது.
ரோகித் அரைசதம்...
தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா , டேவால்ட் பிரேவிஸ் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் சிறப்பாக ஆடினர். பிரேவிஸ் நிலைத்து ஆடினார். மறுபுறம் ரோகித் சர்மா பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டார் . அதிரடி காட்டிய ரோகித் சர்மா அரைசதமடித்தார். மறுபுறம் பிரேவிஸ் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். பின்னர் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 68 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
லக்னோ வெற்றி...
தொடர்ந்து ஹர்திக் பாண்டியா 16 ரன்களும் , இஷான் கிஷான் 14 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசியில் போராடிய நமன் திர் அரைசதமடித்தார். இருப்பினும் மும்பை அணியால் இலக்கை எட்ட முடியவில்லை,. மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது . இதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது.
அணியில் அர்ஜூன் டெண்டுல்கர்
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 17-வது ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி லக்னோ பேட்டிங் செய்தது. முன்னதாக இந்த போட்டியிலிருந்து மும்பை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அர்ஜூன் டெண்டுல்கர் அணியில் சேர்க்கப்பட்டார்.
கடினமாக இருக்கிறது
போட்டி நிறைவடைந்த பாண்ட்யா தெரிவிக்கையில், சற்று கடினமாக இருக்கிறது. நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்த உலகம் போட்டி நிறைந்தது.நடப்பு ஐபிஎல் தொடர் முழுவதுமே எங்களுக்கு சிறப்பானதாக அமையவில்லை. மற்றப் போட்டிகளைப் போலவே லக்னோவுக்கு எதிரான தோல்வியையும் கடந்து செல்ல வேண்டும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ


