முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5-வது கட்ட தேர்தல்: 49 பார்லி., தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு : ராஜ்நாத் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் வாக்களிப்பு

திங்கட்கிழமை, 20 மே 2024      இந்தியா
Rajnath-Singh 2023 04 02

Source: provided

புதுடெல்லி : 5-வது கட்ட பாராளுமன்ற தேர்தலில் நேற்று 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதில் ராஜ்நாத் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் வாக்களித்தனர்.

543 உறுப்பினர்களை கொண்ட இந்திய பாராளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. உலகமே எதிர்பார்க்கும் இந்த தேர்தலில் முதல் 4 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. இதன் மூலம் 379 தொகுதிகளுக்கு தேர்தல் நிறைவடைந்து உள்ளது. இதில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்வான குஜராத்தின் சூரத் தொகுதியும் அடங்கும்.

இதுவரை நடந்த 4 கட்ட தேர்தல்களின் மூலம் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாராளுமன்ற தேர்தல் நிறைவடைந்து விட்டது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற தென் இந்திய மாநிலங்கள் முக்கியமானவை ஆகும். 4 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துள்ள நிலையில் 5-வது கட்டமாக 49 தொகுதிகளில் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.

5-ம் கட்டமாக நேற்று நடைபெற்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 14, மராட்டியம் 13, மேற்கு வங்காளம் 7, பீகார், ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதி அடங்கி உள்ளன. இந்த தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. பல்வேறு தொகுதிகளிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.

நேற்றைய தேர்தலில், அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இதில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பியூஸ் கோயல், ஸ்மிருதி இராணி உள்ளிட்டோர் நேற்று வாக்களித்தனர். இந்தநிலையில் 49 தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. பாராளுமன்ற மக்களவைக்கான 6, 7-ஆம் கட்ட வாக்குப் பதிவுகள் மே 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து